முகப்பு

விடுதலைப் புலிகள் மீது எனக்கும் பற்றிருந்தது. ப. தெய்வீகன்.

“ப. தெய்வீகன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஒரு தமிழ் எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளரும் ஆவார். பெய்யென பெய்யும் வெயில் இவருடைய சமீபத்தைய நூலாகும்.” 1, எல்லோரையும் போலவே நானும் என்னுடைய முதலாவது கேள்வியை முதலில், உங்களைப் பற்றி  கொஞ்சம் சொல்லிவிடுங்களேன் என்றவாறாகவே முன் வைக்கின்றேன்? சொந்த இடம் மானிப்பாய். படிக்க சென்றது யாழ். இந்துக்கல்லூரி. அங்கிருந்து நேரே வேலைக்கு சென்ற இடம் உதயன் பத்திரிகை. போன மாத்திரத்திலேயே விளையாட்டுத்தனமாக இருக்கிறான் என்று கண்டுகொண்டார்களோ என்னவோ விளையாட்டு செய்தியாளராக நியமனம் தந்தார்கள். …

விடுதலைப் புலிகள் மீது எனக்கும் பற்றிருந்தது. ப. தெய்வீகன். Read More »

Catalina

While contemplating suicide, as he was frequently wont to do, Ceylon Nathan happened to look closely at the plateglass window and noticed a snail crawling slowly across it. He went towards it and… luckily, it was on the other side of the glass pane. He tapped his right forefinger against the glass as though to …

Catalina Read More »

The kiss of Judas

For the re-telling of this tale, “The Kiss of Judas”, I made my preliminary notes from the Holy Bible. But I also borrowed some facts from the Gospel of Judas. It is the latter text that mentions that Judas purchased a field with the wages of his sin and falling headlong, he burst open in the middle and all his …

The kiss of Judas Read More »

சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்?

குரோசியாவாக வேடமிட்டிருந்த சோஃபியாவின் கண்களுக்குக் கீழாகச் சற்றுக் கறுத்திருந்தது. அதை மறைப்பதற்காக பவுடரை ஒற்றி ஒற்றி எடுத்தாள். கூர்ந்து கவனித்தபோது அப்போதும் கருமை தெரிவதாகவே அவளுக்குப் பட்டது. பாதங்களினால் தன்னைத்தானே எழுப்பி கண்ணாடிக்கு அருகாக முகத்தைக் கொடுத்தவள், விரல்களினால் கண்களுக்குக் கீழாக வருடினாள்.  அவளுக்கு அழுகை வந்தது. மேசையில் கைகளை ஊன்றிக் கொண்டு அழத்தொடங்கினாள். பின், சட்டென்று அழுகையை நிறுத்திக் கொண்டவள், நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தாள். அவள் அழுத அழுகையின் கண்ணீரானது அவள் முகத்தில் போடப்பட்டிருந்த ஒப்பனையை …

சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்? Read More »

நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ்

ஈழப்பரப்பில் இருந்து தமிழ் இலக்கியத்திற்கான பங்களிப்பு முன்னர் எப்போதும் இல்லா அளவிற்கு அதிகரித்திருக்கிறது. பல புதிய இளைஞர்களும் கவிதை கதை என எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஈழ இலக்கிய விமர்சனமும் அடர்ந்து செறிவுற்றிருக்கிறது. ஈழப் படைப்புகளுக்கான சிறுபத்திரிகைகள் முதல் இணைய இதழ்கள் எனப் பல தளங்களில் எங்களது இலக்கியப் பங்களிப்பு விரிவடைந்திருக்கிறது. இது வரவேற்கக்கூடியதே.  மேலே ஈழப்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டது நிலம் சார்ந்தல்ல. மாறாக பரம்பல் குறித்தானது. ஏனெனில் புலத்திற்கு வெளியே இருந்து புலம்பெயர் இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட …

நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ் Read More »

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள் – தர்மு பிரசாத்.

சாதனாவின் கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன. வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் இரகசியக் கதைகள் போன்ற சொற்ப கவனிப்பே கிடைத்திருக்கிறது. அதிகம் கவனிக்கப்படாததால் நல்ல கதைகள் எனச் சொல்லும் பக்குவம் இன்னும் கைவரவில்லை. சாதனாவின் கதைகளின் போதாமைகளையும், அவை நிலம் நீங்கிச் செல்வதின் அர்த்தமின்மைகளையும் கோடிட விழைகிறேன். தொகுப்பின் முன்னுரையில் சாருநிவேதிதா உலகத் தரத்திற்கான ‘அளவுகோலை’ எழுதியதாக நினைவில் இல்லை. இலக்கிய அடியார்க்கு அருளப்பட்டதாக முடிவுகளை …

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள் – தர்மு பிரசாத். Read More »

இருவர் – சாரு நிவேதிதா.

கடந்த பத்தாண்டுகளில் நான் கண்டெடுத்த இரண்டு புதையல்கள் அராத்துவும் சாதனாவும்.  அராத்துவை இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு எந்த எழுத்தாளரும் எழுத்தாளராக ஒத்துக் கொள்ளப் போவதில்லை.  சீ அசிங்கம் என்றுதான் ஒதுக்குவார்கள்.  எனக்கு 66 வயது ஆகியும் இன்னும் இந்த சீ அசிங்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அதைப் பற்றி நான் கவலையும் படுவதில்லை.  அராத்துவோ ஒரு படி மேல்.  போங்கடா dickheads என்று திட்டிவிட்டுப் போய் விடுவார்.  (ஆனால் அராத்துவை இலக்கிய ஏரியாவுக்கு வெளியே உள்ள இளைஞர்கள் …

இருவர் – சாரு நிவேதிதா. Read More »

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று.

கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் …

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று. Read More »

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன்.

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை …

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன். Read More »