முகப்பு

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன்.

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை […]

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன். Read More »

சாருவின் முன்னுரை.

சாதனாவின் ’தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ என்ற இந்த சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுத அமர்ந்த போது அது அத்தனை சுலபமானது அல்ல என்று உணர்ந்தேன். ஏனென்றால், ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) மரணம் பற்றிய கட்டுரையையும், eroticism பற்றிய கட்டுரைகளையும் படிக்காமல் எழுதுவது இந்தத் தொகுதிக்கு நியாயமானதல்ல என்று தோன்றியது. தமிழில் முதல் முதலாக மரணமும் பாலியலும் இணையும் ஒரு பிரதியைப் படிக்கிறேன். சம்பத்தின் இடைவெளி மரணம் பற்றிய நாவல். ஆனால்

சாருவின் முன்னுரை. Read More »

சாத்தானின் கால்கள்.

தேவனின் முழுப் பெயர் தேவகாந்தன். என்னைக் காட்டிலும் பதினான்கு வருடங்கள் இளையவனான அவனை நான் ஏசு என்ற பெயரிலேயே அழைப்பதுண்டு. நானொரு எழுத்தாளன் என்பதாலும் என்னிடமிருக்கும் புத்தகங்களை இரவல் வாங்கிச் சென்று படிப்பதற்காகவும் வாரத்தில் மூன்று நாட்களாவது என்னைச் சந்திக்க அவன் வருவதுண்டு. ஏசு எப்போதெல்லாம் என் வீட்டுக்கு வருகிறானோ அப்போதெல்லாம் அவன் கையில் ஒரு திராட்சை ரசப் போத்தலிருக்கும். நாமிருவரும் அதை அருந்தியபடியே மணிக்கணக்காக இலக்கியம் பேசுவோம்.   நான் மௌனமாக ஏசுவையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய

சாத்தானின் கால்கள். Read More »

ஓ,,,தாவீது ராஜாவே!

முதலில், அது மீன்தானா… என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இரவு நேரத்தில் சுறாக்களும் அலைந்துகொண்டிருக்கும். முன்னொரு தடவையும்  இப்படித்தான் நிகழ்ந்தது. மீனென்று நினைத்து வலையை ஒரு திட்டமிடலின்றி இழுத்திருக்கின்றார். சுறா இவரைநோக்கி பாய்வதற்குச் சரியாக இரண்டு வினாடிகளுக்கு முன்புதான் வரவிருக்கும் ஆபத்துப்பற்றிச் சிந்தித்தார். தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த சுறாவின் முகத்தை இரண்டு கைகளினாலும் தள்ளிவிட்டு குபீரென்று அப்பாற் பாய்ந்தார். அந்தச் சின்னப் படகின் பின்பக்கத்தில் விழுந்த சுறா, ஒரு விபரிக்க முடியாத மூர்க்கத் தனத்தோடு எம்பியெம்பிக்

ஓ,,,தாவீது ராஜாவே! Read More »

ஆம், கமல் நிகழ மறுத்த அற்புதம் தான்.

விஸ்வரூபம் இரண்டு  பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  ஆளவந்தான், குருதிப்புனல், விருமாண்டி போன்ற படு அட்டகாசமான திரைக்கதையைக் கொண்ட திரைப்படங்களை இயக்கிய அதே கமல்ஹாசன்தானா இவரென ஆச்சர்யமாக இருந்தது.  ஏனெனில், ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.  படம் தொடங்கி முப்பது நிமிடங்கள்கூட ஆகாத நிலையில் படத்தில் இப்படியொரு காட்சி வருகிறது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இன்னும் இருவர். மொத்தமாக ஐந்துபேர் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு விபத்து. அப்படியே மலைச்சரிவொன்றில் தடம் புரள்கிறது கார். புரண்டு கொண்டிருக்கும்போதே கமல்

ஆம், கமல் நிகழ மறுத்த அற்புதம் தான். Read More »

பெருங் காமம்.

அதிகாலையில் விழிப்பு வந்து எழுந்து கொண்டார் திருவேங்கடம். தேகம் வியர்த்திருந்தது. அருகிலிருந்த பித்தளைச் செம்பை எடுத்து இரண்டு தடவைகள் குடித்தவர், செம்பை மறுபடியும் இருந்த இடத்திலேயே வைத்தார். தளர்ந்திருந்த சாரத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டார். திருவேங்கடம் எப்பொழுதுமே இப்படித்தான். அதிகாலையில், தேகம் வியர்த்துப்போய், யாரோ தன்னை, தன் உடலை, அவசர கதியில் உலுப்பி எழுப்பியதுபோல் குபீரென்று எழுந்துகொள்வார். அதே வேகத்தோடு இடதுபக்கமும், வலதுபக்கமும் பார்த்து அமானுஷ்யமோ அல்லது மனிதரோ எதுவுமேயில்லையென்று உணர்ந்து அதன் பின்னரே தன்னினைவுக்கு வருவார்.  திருவேங்கடத்திற்கு

பெருங் காமம். Read More »

கெட்ட வார்த்தை.

ஒரு மனிதனை கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுதல் அதாவது, பெண்குறியைச் சுட்டி ஆபாசமாக வசைதல் மனிதப் பண்புகளில் மிகப் பழமையானது என்றே எனக்குத் தோன்றுகிறது.  ஒரு உதாரணம் சொல்கிறேன்; அப்போது எனக்குப் பதினைந்துவயது. ஒருதடவை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஒரு இடத்தில், ஒரு கூண்டுக்குள் நிறையக் குரங்குகள் இருந்தன. அதில், இரண்டு குரங்குகள் –ஒன்று ஆணாகவும், மற்றது பெண்ணாகவும் –கட்டிப் பிடித்துக் கொஞ்சிக் குலாவி காதல் செய்துகொண்டிருந்தன. மனிதர்களாகிய நாங்கள் அந்த இரண்டு குரங்குகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். இதனால், கோபம் கொண்ட பெண் குரங்கு, எங்களை பார்த்து முறைத்தது.  

கெட்ட வார்த்தை. Read More »