முகப்பு

மரண தேவதை.

“ஆசுவிட்ஸ்” வதை முகாமிற்குச் சென்றிருக்கின்றீர்களா? ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட இடம் அது. துன்புறுத்தலென்றால் வெறும் அடி, உதை அல்ல. இதைப் போன்றொரு மனித அவலம் இனி இந்தப் பூமியில் நடந்தேறி விடுமா என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு அந்தத் துன்புறுத்தல்கள் இருந்திருக்கிறன. சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது யூதர்களின் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் என் காதுகளுக்குள் ஊடுருவியபடியிருந்தன. போலந்தில் Tadeusz என்கிற முப்பத்திமூன்று வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். தான் […]

மரண தேவதை. Read More »

கரித் தெமலோ…!

இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கலாம்? புனிதவதி டீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தமென்று ஆரம்பிக்கலாமா? அல்லது அப்போது அந்த நாட்டில் கடுமையான பனிக் காலமாயிருந்தது என்றாவது ஆரம்பிக்கலாமா? இல்லை… வேண்டாம். நான் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கின்றேன்.  ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்கிற பாடல் வில்வரட்னத்தின் காதுகளில் விழுந்தபோது அவரின் கண்கள் கலங்கத் தொடங்கின. சிறிது நேரம் அந்த ஒலிபெருக்கியையே பார்த்துக்கொண்டிருந்தார்.    வில்வரட்னம் கடவுளின் மீது எவ்வளவு பக்தி கொண்டவரோ அதைவிட இயக்கத்தின் மீதும், இயக்கத் தலைவர் மீதும்

கரித் தெமலோ…! Read More »

மரண தேவதை.

“ஆசுவிட்ஸ்” வதை முகாமிற்குச் சென்றிருக்கின்றீர்களா? ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட இடம் அது. துன்புறுத்தலென்றால் வெறும் அடி, உதை அல்ல. இதைப் போன்றொரு மனித அவலம் இனி இந்தப் பூமியில் நடந்தேறி விடுமா என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு அந்தத் துன்புறுத்தல்கள் இருந்திருக்கிறன. சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது யூதர்களின் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் என் காதுகளுக்குள் ஊடுருவியபடியிருந்தன. போலந்தில் Tadeusz என்கிற முப்பத்திமூன்று வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். தான்

மரண தேவதை. Read More »

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று.

கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம்

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று. Read More »

பாவ மன்னிப்பு.

தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன் அழும்போது அவன்  கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித் தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, ஆஸ்திரோவ்ஸ்கி மீண்டுமொருமுறை துர்கனேவ்வைக் கூர்ந்து கவனித்தார்.   பூஞ்சையான, உள்நோக்கி இருந்த கண்கள். ஒடுங்கிய கன்னங்கள். கூடவே, ஒரு எளிய மனிதன் கொண்டிருக்க வேண்டிய அத்தனை தோற்றங்களையும் துர்கனேவ் கொண்டிருந்தான். அழுதழுது

பாவ மன்னிப்பு. Read More »

நன்றி, SBS மற்றும் ப.தெய்வீகன்.

ஈழப்பின்னணி கொண்ட வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் சாதனா மிக முக்கியமானவர். தற்போது ஜேர்மனியில் வாழும் சாதனா ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ என்ற தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் தொடர்பில் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.

நன்றி, SBS மற்றும் ப.தெய்வீகன். Read More »

நன்றி, ஃபாத்திமா பாபு.

தமிழில் வெளிவரும் ஆடியோ புத்தகங்களுக்கு நான் பூஜ்யம் மதிப்பெண்தான் போடுவேன். எனக்குத் தெரிந்து ஃபாத்திமா பாபு, வித்யா சுபாஷ், ரம்யா ஆகிய மூவரும் மிகச் சிறப்பாக வாசிக்கிறார்கள். இதில் ஃபாத்திமா பாபுவின் வாசிப்பு ஈடு இணையில்லாதது.

நன்றி, ஃபாத்திமா பாபு. Read More »

சாத்தானின் கால்கள்.

தேவனின் முழுப் பெயர் தேவகாந்தன். என்னைக் காட்டிலும் பதினான்கு வருடங்கள் இளையவனான அவனை நான் ஏசு என்ற பெயரிலேயே அழைப்பதுண்டு. நானொரு எழுத்தாளன் என்பதாலும் என்னிடமிருக்கும் புத்தகங்களை இரவல் வாங்கிச் சென்று படிப்பதற்காகவும் வாரத்தில் மூன்று நாட்களாவது என்னைச் சந்திக்க அவன் வருவதுண்டு. ஏசு எப்போதெல்லாம் என் வீட்டுக்கு வருகிறானோ அப்போதெல்லாம் அவன் கையில் ஒரு திராட்சை ரசப் போத்தலிருக்கும். நாமிருவரும் அதை அருந்தியபடியே மணிக்கணக்காக இலக்கியம் பேசுவோம்.   நான் மௌனமாக ஏசுவையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய

சாத்தானின் கால்கள். Read More »

நன்றி, அ. ராமசாமி

ஜூன் மாத அம்ருதாவில் அச்சிடப்பெற்றுள்ள ‘சாதனா’ வின் “சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்” என்ற கதையைத் தமிழில் எழுதப்பெற்ற ஐரோப்பியக் கதை என்று சொல்லலாம். ஐரோப்பியக் குடும்பங்கள் உருவாக்கும் மன அமைப்புகள் தமிழ் மனிதர்களுக்குள்ளும் உருவாகிவரும் சூழலில் இப்படிச் சொல்வதும் வகைப்படுத்துவதும்கூடச் சரியில்லைதான்.மொழியைப் பயன்படுத்துவதில் சிக்கல்களைச் சந்தித்துள்ள சாதனாவின் இந்தப்பிரதியைக் கதை என்று சொல்லும்போது அதற்குள் செயல்பட்டுள்ள நாடகமொழியும் காட்சிப் பிரிவுகளும் கதையல்ல; நாடகம் என்கிறது. மொழிச்சிக்கல்களைக் குறித்துத் தனியாக எழுத வேண்டும்.சோதனை எழுத்துகளை முன்னெடுக்கும் அம்ருதாவின்

நன்றி, அ. ராமசாமி Read More »

நன்றி, SBS மற்றும் ப.தெய்வீகன்.

ஈழப்பின்னணி கொண்ட வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் சாதனா மிக முக்கியமானவர். தற்போது ஜேர்மனியில் வாழும் சாதனா ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ என்ற தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் தொடர்பில் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.

நன்றி, SBS மற்றும் ப.தெய்வீகன். Read More »

Scroll to Top