சிறுகதைகள்

கரித் தெமலோ…!

இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கலாம்? புனிதவதி டீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தமென்று ஆரம்பிக்கலாமா? அல்லது அப்போது அந்த நாட்டில் கடுமையான பனிக் காலமாயிருந்தது என்றாவது ஆரம்பிக்கலாமா? இல்லை… வேண்டாம். நான் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கின்றேன்.  ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்கிற பாடல் வில்வரட்னத்தின் காதுகளில் விழுந்தபோது அவரின் கண்கள் கலங்கத் தொடங்கின. சிறிது நேரம் அந்த ஒலிபெருக்கியையே பார்த்துக்கொண்டிருந்தார்.    வில்வரட்னம் கடவுளின் மீது எவ்வளவு பக்தி கொண்டவரோ அதைவிட இயக்கத்தின் மீதும், இயக்கத் தலைவர் மீதும் […]

கரித் தெமலோ…! Read More »

பாவ மன்னிப்பு.

தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன் அழும்போது அவன்  கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித் தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, ஆஸ்திரோவ்ஸ்கி மீண்டுமொருமுறை துர்கனேவ்வைக் கூர்ந்து கவனித்தார்.   பூஞ்சையான, உள்நோக்கி இருந்த கண்கள். ஒடுங்கிய கன்னங்கள். கூடவே, ஒரு எளிய மனிதன் கொண்டிருக்க வேண்டிய அத்தனை தோற்றங்களையும் துர்கனேவ் கொண்டிருந்தான். அழுதழுது

பாவ மன்னிப்பு. Read More »

சாத்தானின் கால்கள்.

தேவனின் முழுப் பெயர் தேவகாந்தன். என்னைக் காட்டிலும் பதினான்கு வருடங்கள் இளையவனான அவனை நான் ஏசு என்ற பெயரிலேயே அழைப்பதுண்டு. நானொரு எழுத்தாளன் என்பதாலும் என்னிடமிருக்கும் புத்தகங்களை இரவல் வாங்கிச் சென்று படிப்பதற்காகவும் வாரத்தில் மூன்று நாட்களாவது என்னைச் சந்திக்க அவன் வருவதுண்டு. ஏசு எப்போதெல்லாம் என் வீட்டுக்கு வருகிறானோ அப்போதெல்லாம் அவன் கையில் ஒரு திராட்சை ரசப் போத்தலிருக்கும். நாமிருவரும் அதை அருந்தியபடியே மணிக்கணக்காக இலக்கியம் பேசுவோம்.   நான் மௌனமாக ஏசுவையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய

சாத்தானின் கால்கள். Read More »

சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்?

குரோசியாவாக வேடமிட்டிருந்த சோஃபியாவின் கண்களுக்குக் கீழாகச் சற்றுக் கறுத்திருந்தது. அதை மறைப்பதற்காக பவுடரை ஒற்றி ஒற்றி எடுத்தாள். கூர்ந்து கவனித்தபோது அப்போதும் கருமை தெரிவதாகவே அவளுக்குப் பட்டது. பாதங்களினால் தன்னைத்தானே எழுப்பி கண்ணாடிக்கு அருகாக முகத்தைக் கொடுத்தவள், விரல்களினால் கண்களுக்குக் கீழாக வருடினாள்.  அவளுக்கு அழுகை வந்தது. மேசையில் கைகளை ஊன்றிக் கொண்டு அழத்தொடங்கினாள். பின், சட்டென்று அழுகையை நிறுத்திக் கொண்டவள், நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தாள். அவள் அழுத அழுகையின் கண்ணீரானது அவள் முகத்தில் போடப்பட்டிருந்த ஒப்பனையை

சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்? Read More »

பாவ மன்னிப்பு.

புனித லூசையப்புத் தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்தத் தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர் முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார்.  தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன் அழும்போது அவன்  கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும்

பாவ மன்னிப்பு. Read More »

தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள்.

“மூன்றாம் உலகப் போர் ஒருவேளை அணு ஆயுதங்களைக் கொண்டு போரிட்டால், நான்காம் உலகப் போரானது வில் அம்புகளைக்கொண்டு போரிட வேண்டும்.” —லார்ட் லூயி மவுண்ட்பேட்டன். ∙ “மூன்றாம் உலகப்போர் எதைக்கொண்டு போரிடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காம் உலகப்போரானது வெறும் குச்சிகளும் கற்களும் கொண்டு தான் போரிடப்படும்.” —ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்ணாடி முழுவதுமாய், படர்ந்திருந்த பனிமூட்டத்தை, நான் கைகளினாற் தேய்த்து கண்களைக் கிட்டே கொண்டு போய்ப் பார்த்தேன். நெடு, நெடுவென்று வளர்ந்திருந்த ஃபைன் மரங்களும்,ஒலிவ் மரங்களும்

தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள். Read More »

சிறுமி கத்தலோனா

வழக்கம் போல், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது தான் முழுவதுமாய் கண்ணாடி போடப்பட்ட அந்த ஜன்னலை உற்றுப் பார்த்தார் சிலோன் நாதன். அதில் நத்தையொன்று மெதுவாக – மிக மெதுவாக – ஊர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதனருகில் சென்று பார்த்தபோது, நல்லவேளை… கண்ணாடிக்கு வெளிப்பக்கமாகத்தான்  இருந்தது. தனது வலது கையின் கட்டைவிரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார். அது தன்னுடைய உணர்கொம்புகளிலாலான தலையைத் தூக்கி அப்படியே நின்றுவிட்டுப் பின்னர் மீண்டும் தன் பயணத்தைத் தொடரலாயிற்று.

சிறுமி கத்தலோனா Read More »

யூதாஸின் முத்தம்

‘யூதாஸின் முத்தம்’ என்ற இந்தக் கதையின் கதைசொல்லியான நான், முதலில் யூதாஸ் பற்றிய குறிப்புகளை திருவிவிலியத்திலிருந்தே எடுத்திருந்தேன். ஆனாலும் யூதாஸின் நற்செய்தி என்ற நூலிலிருந்தும் சில குறிப்புகளை எடுத்திருந்தேன். அதில், தான் பிலாத்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளில் யூதாஸ் காணியொன்றினை வாங்கியதாகவும், பின்னர் அந்த நிலத்திலேயே வயிறு வெடித்துச் செத்துப் போனதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் நான் அதைத் தவிர்த்துவிட்டு திருவிவிலியத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதையை நகர்த்தலாமென்று முடிவு செய்கின்றேன். ஏனெனில் நான் இந்தக் கதையை எழுதுவதன் நோக்கம்

யூதாஸின் முத்தம் Read More »

Scroll to Top