முகப்பு

அர்த்தநாரீஸ்வரி.

1, முதலில் உங்களிடம் ஒரு மன்னிப்பினைக் கோரிவிடுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் என்பவர் ஒரு நடிகையோ, எழுத்தாளரோ, அல்லது ஒரு படைப்பாளியோ கிடையாது. உலகத்தில் வாழும் சராசரி மனுஷிகளைப் போன்றுதான் அவளும். பெண்களைப் போன்றுதான் ஆடை அணிகிறாள். பெண்களைப் போன்றுதான் நளினப்படுகிறாள். பெண்களைப் போன்றுதான் பேசுகிறாள். பின் எதற்காக இவளை நான் நேர்காணல் செய்யப் பிரியப்படுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் ஒரு பெண்ணின் தோற்றத்தை உடையவளாகயிருந்தாலும் உண்மையில் அவளொரு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள். ( THIRD GENDER […]

அர்த்தநாரீஸ்வரி. Read More »

குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பிடிப்பதில்லை.

மேதகு முசேவெனி ! நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில்  ஒருத்தியான ஷைனா கெய்ட்ரசி பேசுகின்றேன். என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது ,அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகின்றது. எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகின்றாய் . எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது. உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை இரத்தம் சிந்த வைக்கின்றன. நான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர

குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பிடிப்பதில்லை. Read More »

அக்கா

அதோ, அங்கே வந்துகொண்டிருக்கிறதே மஞ்சள் நிறப் பேருந்து, அதில் ஏறி பதின்மூன்று கிலோமீற்றர்கள் பயணம் செய்து “லியங்கோ குர்ஸி” என்ற இடத்தில் இறங்கி, பொடிநடையாக ஒரு எட்டுப்பத்து நிமிடம் நடந்து சென்றால் என் கிராமம் வரும். அவிங்கு தன்யா. இதுதான் என் கிராமத்தின் பெயர். அது காரணப் பெயரா அல்லது இடுகுறிப்பெயரா என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை. அம்மாவிடம் விசாரித்தபோது அவள் ஒரு கதை சொன்னாள்.ஒருதடவை எங்கள் ஊரில் இருந்த நெல்லி என்கிற பையனுக்கு பிசாசு பிடித்துவிட்டது.

அக்கா Read More »

தாய்

அந்த வீதி நீளமாக இருந்தது.  அது மாசி மாத ஆரம்பம் என்பதால் பனி நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் அளவிற்குக் கொட்டி இருக்கவேண்டும்.  குதிரையின் காலடித் தடங்களும், அவை இழுத்து வந்திருந்த கூட்சு வண்டிகளின் சக்கரத் தடங்களும் வெள்ளைத்தாளில் வரையப்பட்டிருந்த புரியாத ஓவியங்களைப் போல் குறுக்கும் நெடுக்குமாக நீண்டு இருந்தன.  அந்த வீதியில் நடந்துபோகும் ஒருவர், கொஞ்சம் நிதானித்துத் தன்னுடைய காதுகளை கூர்மையாக்கிக் கேட்பாராக இருந்தால்… அந்தக் காட்டுப்பகுதியில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தங்களின்

தாய் Read More »