முகப்பு

மரண தேவதை.

“ஆசுவிட்ஸ்” வதை முகாமிற்குச் சென்றிருக்கின்றீர்களா? ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட இடம் அது. துன்புறுத்தலென்றால் வெறும் அடி, உதை அல்ல. இதைப் போன்றொரு மனித அவலம் இனி இந்தப் பூமியில் நடந்தேறி விடுமா என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு அந்தத் துன்புறுத்தல்கள் இருந்திருக்கிறன. சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது யூதர்களின் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் என் காதுகளுக்குள் ஊடுருவியபடியிருந்தன. போலந்தில் Tadeusz என்கிற முப்பத்திமூன்று வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். தான் …

மரண தேவதை. Read More »

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று.

கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் …

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று. Read More »

பாவ மன்னிப்பு.

புனித லூசையப்புத் தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்தத் தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர் முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார்.  தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன் அழும்போது அவன்  கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் …

பாவ மன்னிப்பு. Read More »

நன்றி, SBS மற்றும் ப.தெய்வீகன்.

ஈழப்பின்னணி கொண்ட வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் சாதனா மிக முக்கியமானவர். தற்போது ஜேர்மனியில் வாழும் சாதனா ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ என்ற தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் தொடர்பில் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.

நன்றி, ஃபாத்திமா பாபு.

தமிழில் வெளிவரும் ஆடியோ புத்தகங்களுக்கு நான் பூஜ்யம் மதிப்பெண்தான் போடுவேன். எனக்குத் தெரிந்து ஃபாத்திமா பாபு, வித்யா சுபாஷ், ரம்யா ஆகிய மூவரும் மிகச் சிறப்பாக வாசிக்கிறார்கள். இதில் ஃபாத்திமா பாபுவின் வாசிப்பு ஈடு இணையில்லாதது.

சிறுமி கத்தலோனா

வழக்கம் போல், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது தான் முழுவதுமாய் கண்ணாடி போடப்பட்ட அந்த ஜன்னலை உற்றுப் பார்த்தார் சிலோன் நாதன். அதில் நத்தையொன்று மெதுவாக – மிக மெதுவாக – ஊர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதனருகில் சென்று பார்த்தபோது, நல்லவேளை… கண்ணாடிக்கு வெளிப்பக்கமாகத்தான்  இருந்தது. தனது வலது கையின் கட்டைவிரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார். அது தன்னுடைய உணர்கொம்புகளிலாலான தலையைத் தூக்கி அப்படியே நின்றுவிட்டுப் பின்னர் மீண்டும் தன் பயணத்தைத் தொடரலாயிற்று. …

சிறுமி கத்தலோனா Read More »

யூதாஸின் முத்தம்

‘யூதாஸின் முத்தம்’ என்ற இந்தக் கதையின் கதைசொல்லியான நான், முதலில் யூதாஸ் பற்றிய குறிப்புகளை திருவிவிலியத்திலிருந்தே எடுத்திருந்தேன். ஆனாலும் யூதாஸின் நற்செய்தி என்ற நூலிலிருந்தும் சில குறிப்புகளை எடுத்திருந்தேன். அதில், தான் பிலாத்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளில் யூதாஸ் காணியொன்றினை வாங்கியதாகவும், பின்னர் அந்த நிலத்திலேயே வயிறு வெடித்துச் செத்துப் போனதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் நான் அதைத் தவிர்த்துவிட்டு திருவிவிலியத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதையை நகர்த்தலாமென்று முடிவு செய்கின்றேன். ஏனெனில் நான் இந்தக் கதையை எழுதுவதன் நோக்கம் …

யூதாஸின் முத்தம் Read More »

தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள்.

“மூன்றாம் உலகப் போர் ஒருவேளை அணு ஆயுதங்களைக் கொண்டு போரிட்டால், நான்காம் உலகப் போரானது வில் அம்புகளைக்கொண்டு போரிட வேண்டும்.” —லார்ட் லூயி மவுண்ட்பேட்டன். ∙ “மூன்றாம் உலகப்போர் எதைக்கொண்டு போரிடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காம் உலகப்போரானது வெறும் குச்சிகளும் கற்களும் கொண்டு தான் போரிடப்படும்.” —ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்ணாடி முழுவதுமாய், படர்ந்திருந்த பனிமூட்டத்தை, நான் கைகளினாற் தேய்த்து கண்களைக் கிட்டே கொண்டு போய்ப் பார்த்தேன். நெடு, நெடுவென்று வளர்ந்திருந்த ஃபைன் மரங்களும்,ஒலிவ் மரங்களும் …

தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள். Read More »

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.

சில வருடங்களுக்கு முன்னர்,  நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்த மதம் குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன.  ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா? எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது? இப்படி எண்ணற்ற கேள்விகள்.  ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில் …

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு. Read More »