நேர்காணல்கள்

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று.

கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் […]

என்னுடைய மிகச்சிறிய நேர்காணல் ஒன்று. Read More »

நன்றி, SBS மற்றும் ப.தெய்வீகன்.

ஈழப்பின்னணி கொண்ட வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் சாதனா மிக முக்கியமானவர். தற்போது ஜேர்மனியில் வாழும் சாதனா ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ என்ற தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் தொடர்பில் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.

நன்றி, SBS மற்றும் ப.தெய்வீகன். Read More »

விடுதலைப் புலிகள் மீது எனக்கும் பற்றிருந்தது. ப. தெய்வீகன்.

“ப. தெய்வீகன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஒரு தமிழ் எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளரும் ஆவார். பெய்யென பெய்யும் வெயில் இவருடைய சமீபத்தைய நூலாகும்.” 1, எல்லோரையும் போலவே நானும் என்னுடைய முதலாவது கேள்வியை முதலில், உங்களைப் பற்றி  கொஞ்சம் சொல்லிவிடுங்களேன் என்றவாறாகவே முன் வைக்கின்றேன்? சொந்த இடம் மானிப்பாய். படிக்க சென்றது யாழ். இந்துக்கல்லூரி. அங்கிருந்து நேரே வேலைக்கு சென்ற இடம் உதயன் பத்திரிகை. போன மாத்திரத்திலேயே விளையாட்டுத்தனமாக இருக்கிறான் என்று கண்டுகொண்டார்களோ என்னவோ விளையாட்டு செய்தியாளராக நியமனம் தந்தார்கள்.

விடுதலைப் புலிகள் மீது எனக்கும் பற்றிருந்தது. ப. தெய்வீகன். Read More »

அர்த்தநாரீஸ்வரி.

1, முதலில் உங்களிடம் ஒரு மன்னிப்பினைக் கோரிவிடுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் என்பவர் ஒரு நடிகையோ, எழுத்தாளரோ, அல்லது ஒரு படைப்பாளியோ கிடையாது. உலகத்தில் வாழும் சராசரி மனுஷிகளைப் போன்றுதான் அவளும். பெண்களைப் போன்றுதான் ஆடை அணிகிறாள். பெண்களைப் போன்றுதான் நளினப்படுகிறாள். பெண்களைப் போன்றுதான் பேசுகிறாள். பின் எதற்காக இவளை நான் நேர்காணல் செய்யப் பிரியப்படுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் ஒரு பெண்ணின் தோற்றத்தை உடையவளாகயிருந்தாலும் உண்மையில் அவளொரு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள். ( THIRD GENDER

அர்த்தநாரீஸ்வரி. Read More »

Scroll to Top