கட்டுரைகள்

மரண தேவதை.

“ஆசுவிட்ஸ்” வதை முகாமிற்குச் சென்றிருக்கின்றீர்களா? ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்ட இடம் அது. துன்புறுத்தலென்றால் வெறும் அடி, உதை அல்ல. இதைப் போன்றொரு மனித அவலம் இனி இந்தப் பூமியில் நடந்தேறி விடுமா என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு அந்தத் துன்புறுத்தல்கள் இருந்திருக்கிறன. சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது யூதர்களின் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் என் காதுகளுக்குள் ஊடுருவியபடியிருந்தன. போலந்தில் Tadeusz என்கிற முப்பத்திமூன்று வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். தான் […]

மரண தேவதை. Read More »

நன்றி, அ. ராமசாமி

ஜூன் மாத அம்ருதாவில் அச்சிடப்பெற்றுள்ள ‘சாதனா’ வின் “சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்” என்ற கதையைத் தமிழில் எழுதப்பெற்ற ஐரோப்பியக் கதை என்று சொல்லலாம். ஐரோப்பியக் குடும்பங்கள் உருவாக்கும் மன அமைப்புகள் தமிழ் மனிதர்களுக்குள்ளும் உருவாகிவரும் சூழலில் இப்படிச் சொல்வதும் வகைப்படுத்துவதும்கூடச் சரியில்லைதான்.மொழியைப் பயன்படுத்துவதில் சிக்கல்களைச் சந்தித்துள்ள சாதனாவின் இந்தப்பிரதியைக் கதை என்று சொல்லும்போது அதற்குள் செயல்பட்டுள்ள நாடகமொழியும் காட்சிப் பிரிவுகளும் கதையல்ல; நாடகம் என்கிறது. மொழிச்சிக்கல்களைக் குறித்துத் தனியாக எழுத வேண்டும்.சோதனை எழுத்துகளை முன்னெடுக்கும் அம்ருதாவின்

நன்றி, அ. ராமசாமி Read More »

இருவர் – சாரு நிவேதிதா.

கடந்த பத்தாண்டுகளில் நான் கண்டெடுத்த இரண்டு புதையல்கள் அராத்துவும் சாதனாவும்.  அராத்துவை இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு எந்த எழுத்தாளரும் எழுத்தாளராக ஒத்துக் கொள்ளப் போவதில்லை.  சீ அசிங்கம் என்றுதான் ஒதுக்குவார்கள்.  எனக்கு 66 வயது ஆகியும் இன்னும் இந்த சீ அசிங்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அதைப் பற்றி நான் கவலையும் படுவதில்லை.  அராத்துவோ ஒரு படி மேல்.  போங்கடா dickheads என்று திட்டிவிட்டுப் போய் விடுவார்.  (ஆனால் அராத்துவை இலக்கிய ஏரியாவுக்கு வெளியே உள்ள இளைஞர்கள்

இருவர் – சாரு நிவேதிதா. Read More »

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள் – தர்மு பிரசாத்.

சாதனாவின் கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன. வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் இரகசியக் கதைகள் போன்ற சொற்ப கவனிப்பே கிடைத்திருக்கிறது. அதிகம் கவனிக்கப்படாததால் நல்ல கதைகள் எனச் சொல்லும் பக்குவம் இன்னும் கைவரவில்லை. சாதனாவின் கதைகளின் போதாமைகளையும், அவை நிலம் நீங்கிச் செல்வதின் அர்த்தமின்மைகளையும் கோடிட விழைகிறேன். தொகுப்பின் முன்னுரையில் சாருநிவேதிதா உலகத் தரத்திற்கான ‘அளவுகோலை’ எழுதியதாக நினைவில் இல்லை. இலக்கிய அடியார்க்கு அருளப்பட்டதாக முடிவுகளை

பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள் – தர்மு பிரசாத். Read More »

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.

சில வருடங்களுக்கு முன்னர்,  நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்த மதம் குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன.  ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா? எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது? இப்படி எண்ணற்ற கேள்விகள்.  ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில்

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு. Read More »

நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ்

ஈழப்பரப்பில் இருந்து தமிழ் இலக்கியத்திற்கான பங்களிப்பு முன்னர் எப்போதும் இல்லா அளவிற்கு அதிகரித்திருக்கிறது. பல புதிய இளைஞர்களும் கவிதை கதை என எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஈழ இலக்கிய விமர்சனமும் அடர்ந்து செறிவுற்றிருக்கிறது. ஈழப் படைப்புகளுக்கான சிறுபத்திரிகைகள் முதல் இணைய இதழ்கள் எனப் பல தளங்களில் எங்களது இலக்கியப் பங்களிப்பு விரிவடைந்திருக்கிறது. இது வரவேற்கக்கூடியதே.  மேலே ஈழப்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டது நிலம் சார்ந்தல்ல. மாறாக பரம்பல் குறித்தானது. ஏனெனில் புலத்திற்கு வெளியே இருந்து புலம்பெயர் இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட

நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ் Read More »

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன்.

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன். Read More »

சாருவின் முன்னுரை.

சாதனாவின் ’தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ என்ற இந்த சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுத அமர்ந்த போது அது அத்தனை சுலபமானது அல்ல என்று உணர்ந்தேன். ஏனென்றால், ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) மரணம் பற்றிய கட்டுரையையும், eroticism பற்றிய கட்டுரைகளையும் படிக்காமல் எழுதுவது இந்தத் தொகுதிக்கு நியாயமானதல்ல என்று தோன்றியது. தமிழில் முதல் முதலாக மரணமும் பாலியலும் இணையும் ஒரு பிரதியைப் படிக்கிறேன். சம்பத்தின் இடைவெளி மரணம் பற்றிய நாவல். ஆனால்

சாருவின் முன்னுரை. Read More »

ஆம், கமல் நிகழ மறுத்த அற்புதம் தான்.

விஸ்வரூபம் இரண்டு  பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  ஆளவந்தான், குருதிப்புனல், விருமாண்டி போன்ற படு அட்டகாசமான திரைக்கதையைக் கொண்ட திரைப்படங்களை இயக்கிய அதே கமல்ஹாசன்தானா இவரென ஆச்சர்யமாக இருந்தது.  ஏனெனில், ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.  படம் தொடங்கி முப்பது நிமிடங்கள்கூட ஆகாத நிலையில் படத்தில் இப்படியொரு காட்சி வருகிறது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இன்னும் இருவர். மொத்தமாக ஐந்துபேர் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு விபத்து. அப்படியே மலைச்சரிவொன்றில் தடம் புரள்கிறது கார். புரண்டு கொண்டிருக்கும்போதே கமல்

ஆம், கமல் நிகழ மறுத்த அற்புதம் தான். Read More »

குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பிடிப்பதில்லை.

மேதகு முசேவெனி !நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான ஷைனா கெய்ட்ரசி பேசுகின்றேன்.என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது ,அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகின்றது.எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகின்றாய் .எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது.உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை இரத்தம் சிந்த வைக்கின்றன. நான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று. நீ

குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பிடிப்பதில்லை. Read More »

Scroll to Top