பெருங் காமம்.


திருவேங்கடத்திற்கு இன்னொர் விதமான பிரச்சினை இருந்தது. ஆனால் நிச்சியமாக அது சாவைப் பற்றியதாக இல்லை. முப்பது வயதில் திருமணம் முடித்து முப்பத்து மூன்றாவது வயதில் அதாவது மூன்றே ஆண்டுகளில் மனைவி போய்விட தனிமையில், ரொம்ப ரொம்பத் தனிமையில் மறுமணமே வேண்டாமென்று அதில் திண்ணமாகவுமிருந்து நாற்பத்து நான்கு வயதுவரை சொல்லிக்கொள்ளும்படியான கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்தாலும் காமம் அவரை விடாப்பிடியாய்ப் படுத்தியது. 

மூன்றே எழுத்துக்கள். மூன்றே மூன்று எழுத்துக்கள்தான். கா – ம – ம். மறுபடியும் ஒருமுறை எழுத்துக் கூட்டிப் பாருங்கள். நிச்சயமாக மூன்றெழுத்துக்கள்தான். ஆனால் அது படுத்தும் பாடு இருக்கிறதே…!!! அப்பப்பா…!!! 

திருவேங்கடத்திற்கு மறுபடியும் காமம் பற்றிய நினைவு வந்தது. திருவிவிலியத்தில் எழுதியிருக்கும்படிக்கு ஆதாமும், ஏவாளுமே பிள்ளைகளைப் பெற்றார்களெனில் அதைச் சாத்தியமாக்குதலுக்கு, பூரணப்படுத்துதலுக்கு ஆண் பெண் குறிகளே அவசியமென்பதை அவர்கள் எப்படியறிந்துகொண்டார்கள் என்பதை நினைக்கும்போது வியப்பாகவும், சிலவேளைகளில் சிரிப்பாகவுமிருக்கும். திருவேங்கடம் இம்முறை சிரித்துக்கொண்டார்.  

பதின்மூன்று வயதாகயிருக்கும்போது திருவேங்கடம் ஒருதடவை கஜூரஹோ கோவிலுக்குச் சென்றிருந்தார். நீண்டு பெருத்த விஸ்தாரமான கோவில். யோகவர்மனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அப்போதுதான் கோவில் தூண்களிலும், சுவர்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களை அவர் பார்த்தார். முழு அம்மணமாயிருந்த பெண்ணொருத்தி தொங்கும் முலைகளோடு குனிந்து நிற்க அவளுடைய காதலன், அவளுடன் பிருஷ்டப்  புணர்ச்சியில் ஈடுபடுகிறான். அவர்களுக்குப் பக்கத்தில், ரொம்ப ரொம்பப் பக்கத்தில் பெண்ணொருத்தி நிலத்தில் குந்தியிருந்து தன் காதலனின் குறியைச் சுவைத்துக்கொண்டிருக்கிறாள். திருவேங்கடத்திற்கு தேகம் உதறி நடுங்கத் தொடங்கிற்று. தன் உடலிலிருந்து வெப்பமாக ஏதோவொன்று வெளியேறுவதுபோல் அவருக்குப் பட்டது. சுற்றுமுற்றும் பார்த்தவர், யாருமில்லை என்பதை அறிந்து ஏதோவொரு தைரியம் அல்லது அந்த வயதில் எல்லோருக்கும் இருக்கும் காமம் பற்றியதான இச்சை அவரையும் உந்தித் தள்ள மற்ற சுவர்களையும் ஒரு விறுவிறுப்புடன் பார்த்தார். காதலியின் யோனியை சுவைக்கும் காதலன், விறைத்திருக்கும் ஆண்குறியை உருவிவிடும் காதலி, அறுபத்தொன்பது வடிவத்தில் கலவி கொள்ளும் காதலர்கள், காதலியை இடுப்பில் தூக்கிவைத்து உறவு கொள்ளும் காதலன்… இப்படி எண்ணற்ற சிற்பங்கள்.  

கோவிலைவிட்டு வெளியே வந்தவருக்கு, ஆன்மிகத்துக்கும், காமத்துக்கும் என்ன சம்பந்தம் என்றவாறாகவே பட்டது. அதற்கு மேல், அந்தப் பதின்மூன்று வயதில் அவரால் அதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. ஆனாலும் “கஜீராகோ” கோவிலில் கண்ட சிற்பங்கள் திருவேங்கடத்தைப் படுத்தியது. சதாசர்வகாலமும் அவர் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார். தானே கோவில்களிலிருக்கும் சிற்பங்களில் ஒன்றாக மாறி காதலியின் குறியினை சுவைப்பதுபோல் நினைத்துப் பார்த்தார். 

குளிக்கும்போது Vagina is a complicated nest என்றுதான் திருவேங்கடத்துக்குத் தோன்றியது. அவரைப் பொறுத்தவரை அது உண்மையும்கூட. அதனால்தான் அவர்களால் அவ்வளவு இலகுவில் ஆண்களை அடக்க முடிகிறது. கமலாதாஸிடம்கூட உன்னுடைய அல்குலிலேயே என்னுயிர் மையம் கொண்டுள்ளது; உன் யோனி ஒரு சவக்கிடங்காய் மாறி என்னை மூடிக்கொண்டுள்ளது என்று எத்தனை தடவைகள் புலம்பியிருப்பார். பெண்ணின் சரீரம்தான் எத்தனை விந்தையானது. கடவுள்களினால்கூட கண்டுபிடிக்கமுடியாத புதிர் அது. வெப்ப நீரானது திருவேங்கடத்தின் உடலை நனைத்து ஓடியது. அப்படியே கண்களை மூடிக்கொண்டார்.  

இயலாதவனின் காமம் தீயைக் காட்டிலும் உக்கிரமானதென்றுதான் அவருக்குப் பட்டது. அப்படியாயின் இயன்றவனுக்குக் காமம் ஒரு பொருட்டே இல்லையா? குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொள்ளும்போது அவருக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அதைப்பற்றி யோசிப்பதற்கு முன்னால் காமம் என்றால் என்னவென்பதைத் தீர்க்கமாக விளங்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தார். அதோடு காமம் என்பதன் முழுமையை, அதன் சிக்கல்களை தத்துவார்த்தமாகவோ குறைந்தபட்சம் கோட்பாட்டு ரீதியாகவோ விளங்கிக்கொண்டவர்கள் யாராவது இருப்பார்களா என்கிற கிளைக் கேள்வியும் அவருள் எழுந்தது.  

உடை மாற்றிக்கொள்ளும்போது சோப்பினின் கவிதைப் புத்தகத்தை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டார்.  

இப்போதெல்லாம் தான் அசட்டையாக இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. எல்லாவற்றுக்கும் தன்னுடைய அதீதமான காமம்தான் காரணமா என்றும் நினைக்கத் தோன்றியது. நேற்று கூட அவர் தலைவலி மாத்திரையையும், தண்ணீர் பாட்டிலையும் மறந்திருந்தார். அதனால் தேகம் நடுங்கி உடல் வியர்த்து ரொம்பவும் சிரமமாகிவிட்டது. முதலில் தன்னுடைய பிரச்சினைக்கு நல்ல மருத்துவர் ஒருவரைச் சந்திக்க வேண்டுமெனவும் அவர் நினைத்துக்கொண்டார்.  

2. 

வழியில், அந்தத் தேனீர்க்கடையில், ஒரு காஃபி சொல்லிவிட்டு அது வரும்வரை தன்னைச் சுற்றியிருந்த உலகத்தை வேடிக்கை பார்த்தார். தூரத்தில், பனைமரங்கள் அமைதியாக – அது ஏதோ தவம்போல் – நின்றுகொண்டிருந்தன. திருவேங்கடத்திற்கு அந்தப் பனைமரங்கள் இருபது வருடப் பரிச்சயம். தன் இருபத்து மூன்றாவது வயதில், பம்பாயிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி தன் பெற்றோருடன் குடியேறியபோது முதல்முதலாக அந்தப் பனைமரங்கள்தான் அவரை வரவேற்றன. அதற்கு ஏழு வருடங்கள் கழித்து கமலாதாஸைத் திருமணம் செய்துகொண்டபோதும் அந்தப் பனைமரங்கள் அவருடனே பிறந்தவைபோல் அவர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவொன்றாக மாறிவிட்டது. இப்போதும் பெரிய வித்தியாசமில்லை; ஓரிரண்டு குறைந்ததோடு சரி.  

இவை அனைத்தையும் நினைத்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது. நடுராத்திரியில், பனிரண்டோ, ஒன்றோ மறுபடியும் விழிப்பு வந்து மனைவியை எழுப்பி அவள் பிடிவாதமாக மறுத்தும் விடாமல், வியர்வைத் தெப்பலாக புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஜன்னலின் வழியே, அசையும் திரையினூடே அவருக்கு இந்தப் பனைமரங்களே தெரிந்தன.  

காஃபி வந்ததும் அதை வாங்கி உறிஞ்சினார். அதிகாலையில் இந்தக் கடைக்காரனிடம் கிடைக்கும் காஃபி திருவேங்கடத்தைப் பொறுத்தவரை ஒரு அதிசயம், ஆச்சர்யம்; எல்லாம் கலந்த கலவை. எத்தனையோ தடவை சொல்லியும் கமலாதாஸுக்கு அந்தப் பக்குவம் கைகூடவில்லை. ஆனால், இவனால் மாத்திரம் எப்படி? அதுவும் இருபது வருடங்களாக! “Even after 20 years, how can the taste continue to be so delicious.” 

நாக்கை நீட்டி, காஃபிக் குவளையை அதன் மேல் இரண்டு தடவைகள் தட்டினார். கடைசிச் சொட்டு காஃபியையும் காலி செய்தார். கடைக்காரனிடம் சில்லறையைக் கொடுத்தபோது அதிகாலை விடியற்காலை ஆயிற்று.  

பேருந்தில் போகும்போது நெரிசலாக உணர்ந்தார். உட்காருவதற்கு ஒரு இடம் கிடைத்தால் தேவலாமென்று தோன்றிற்று. சிறிது நேரம் பேருந்தை கண்களால் அளந்தவர், முப்பதைத் தாண்டிய இரண்டு பெண்கள் சிரித்துச், சிரித்து எதையோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களுக்குப் பக்கத்தில் குண்டாக, தலையில் முடியில்லாமல் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இவர் அவனைப் பார்த்தபோது அவனும் இவரைப் பார்த்தான். பார்வையைத் திருப்பிக்கொண்டவர் கும்பலாக இருந்த பெண்களைக் கண்டார். எல்லோருமே பதின்மவயதுப் பெண்கள். தொடை தெரிய குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு எதிரிலிருந்த ஆண்களுடன் கதைத்துக்கொண்டிருந்தார்கள். தெத்துப்பல் பெண்ணொருத்தி “How was last night?” என்றாள்.  

பதிலுக்கு எதிரிலிருந்தவன் she is not come last night and then my last night was masterbation (இலக்கணப் பிழை.  திருத்தப்பட வேண்டும்) என்றான். பெண்கள் எல்லோரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். திருவேங்கடத்திற்கு வயிற்றில் ஏதோ எரிவது போல் தோன்றியது. இந்தக் காலத்து இளைஞர்கள்தான் எவ்வளவு கொடுத்துவைத்தவர்களென்றும் தானும் அவர்களில் ஒருவனாகயிருந்தால் நன்றாகயிருக்குமே என்றும் நினைத்தார். பிற்பாடு அப்படி நினைத்ததின் அபத்தம் குறித்துச் சிரித்தார். இருந்தாலும் திருவேங்கடத்திற்கு அந்த இளைஞர்களைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையாகவும், அதே நேரம், அவர்களுக்கும் வயதுபோகுமென்று பட்டபோது சற்றே ஆசுவாசமாகவும் இருந்தது.  

பேருந்தைவிட்டு இறங்கியதும் சினிமா தியேட்டர் பக்கம் திரும்பி, மஞ்சள் வருவதற்காய் சற்றுத் தாமதித்து, வந்ததும் அவசரமாய், ஓடுவதுபோல் கடந்து, அப்படிக்  கடக்கும்போது அனிச்சையாக கிளி ஜோசியக்காரனைப் பார்த்து,  “சென்னை மத்திய கலைக் கல்லூரி” என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தார்.   

ஆசிரியர் அறைக்குள் பரமேஸ்வரனும். தில்லைநாதனும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் முகமன் கூறிவிட்டு திருவேங்கடம் தான் கொண்டுவந்திருந்த கருப்புநிறத்திலான பையை தன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த அலமாரிக்குள் வைத்துக்கொண்டார். கையில் சோப்பினின் புத்தகம் இருந்தது. காஃபி இயந்திரத்தில் ஒரு குவளை அளவிலான காஃபியை நிரப்பிக்கொண்டவரான திருவேங்கடம் குவளையினுடனேயே வகுப்பறைக்குள் நுழைந்தார்.  

மாணவர்களுக்கு முகமன் கூறிய அவர், சோப்பினின் கவிதைப் புத்தகத்தில் எண்பத்து நான்காம் பக்கத்தைத் திறந்துகொண்டார். கடந்த பதினெட்டு வருடங்களாக இந்தக் கல்லூரியில்தான் திருவேங்கடம் கலைப்பிரிவு ஆசிரியராக இருக்கிறார். இருந்தாலும் மாணவர்களின் போக்கினையும், அவர்களின் சிந்தனையையும் கண்டுபிடிப்பது அவருக்கு இன்றுவரை சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது. சோப்பினின் கவிதையில் வரும் புதிர் நிரம்பிய மனிதர்களைப் போலவே அவர் தன்னுடைய மாணவர்களையும் எண்ணினார்.  

எண்பத்து நான்காம் பக்கக் கவிதையை உரக்க வாசித்த அவர், அதன் பொருளை விளங்கப் படுத்தினார். பின்னர் குறிப்பிட்ட சிலரிடம் கவிதையையும், அதற்கான பொருளையும் கூறச் சொன்னார்.  

இரண்டாம் நேரப் பாடவேளை முடிந்து முன்றாம் நேரப் பாடவேளையில் ஜெர்சியைச் சந்தித்தார்.  திருவேங்கடம் ஜெர்சியைத் தன் வகுப்பறையில் பல முறை சந்தித்திருந்தாலும் ஒருதடவை கூட அவளிடம் கவிதை ஒன்றைச் சொல்லுமாறோ அல்லது கவிதைக்கான பொருளைக் கூறுமாறோ அவர் கேட்டதில்லை. பல சமயங்களில் அவர் அவளைத் தவிர்த்தே வந்திருக்கிறார். ஏனெனில் அவளை முதல்முதலாகச் சந்தித்தபோது ஜெர்சியின் சீரான உடல்வாகும், நேர்த்தியான நாசியும் திருவேங்கடத்தைப் படுத்தியது. சர்ந்தப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர் ஜெர்சியைப் பார்ப்பார். அவள் அழகை ரசிப்பார். வீட்டுக்குத் திரும்பியதும் ஜெர்சியை நினைத்து ஓரிரு தடவைகள் கரமைதுனமும் செய்ததுண்டு. 

அதன் பிறகான நாட்களில் திருவேங்கடம் ஜெர்சியைப் பார்ப்பதை முற்றாகத் தவிர்த்தே வந்தார். ஆனால் இன்று அந்த ஜெர்சி திருவேங்கடத்துக்கு மிக அருகிலிருந்தாள். திருவேங்கடத்துக்கு அவருள் குடிகொண்டிருந்த காமம் மறுபடியுமாகக் கிளர்ந்தெழுந்தது. யாருக்கும் தெரியாமல் அவள் கூந்தல் மணத்தை மெலிதாக நுகர்ந்தார். திருவேங்கடத்திற்கு ஏதோ செய்தது. அப்படியே குனிந்து யார் என்ன சொன்னால் என்ன, சொல்லிவிட்டுப் போகட்டும், அவள் அல்குலை நுகர்ந்தால் என்னவென்று தோன்றிற்று. மனதுக்குள் தான் அவ்வாறு செய்வதாகவும் நினைத்துப் பார்த்தார். அன்றைய தினம் அதன் பிறகான சமயங்களில் திருவேங்கடத்துக்குக் கீழ்வருமாறு இரண்டு சம்பவங்கள் நடைபெறலாயிற்று.  

முதல் சம்பவம் : திருவேங்கடம் கல்லூரி வளாகத்தில் உலாத்திக் கொண்டிருந்தபோது ஜெர்சியைக் கண்டார். அவள் உதட்டில் தெரிந்த சிரிப்பைக் கண்டபோது திருவேங்கடத்துக்குக் கேட்கலாமென்று தோன்றியது. யாரிடமாவது சொல்லிவிட்டால்? சொல்லமாட்டாள். என்ன நிச்சயம்? ஏதோவொரு நிச்சயம். திருவேங்கடத்துக்குத் தன் தேகம் காலியானதைப் போல் பட்டது. கூடவே தன் அறிவும் தொலைந்துபோனதுபோல் தோன்றியபோது கேட்டேவிட்டார். பார்வையைத் தாழ்த்தி, “May I sex with you?” (பிழை, திருத்தப்பட வேண்டும்) என்றார்.  

ஜெர்சி தன் உடலைக் குறுக்கி, கையை உதறி கொல்லென்று சிரித்தாள். திருவேங்கடம் பார்த்தபோது சிரிப்பதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தாள். ஆனால் அப்போதும் அவள் உதடுகளில் சிறிய புன்னகை மீந்திருப்பதைக் கண்டு திருவேங்கடம் மறுபடியும் தன் தலையைத் தாழ்த்தி தரையைப் பார்த்துக்கொண்டார்.  

“What is your age திருவேங்கடம்? Forty, ortyfive… whatever… எப்படியும் இருக்கட்டும். ஆனால் எனக்கு இப்போதுதான் பதினெட்டு. நீங்கள் என்னைவிட இருபத்தியேழு வயது மூத்தவர்.” 

திருவேங்கடத்துக்கு அதனால் என்னவென்று தோன்றியது. கேட்கலாமா என்று நினைத்தவர் அவள் பேசி முடிக்கட்டும் என்றவாறாக நின்றார்.  

”So how can I sex with you?” (திருத்தம்) என்றாள்.  

ஜெர்சி அப்படிக் கேட்டது திருவேங்கடத்துக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. உண்மையில் அவள் காலில் விழுந்து கெஞ்சக்கூட அவர் தயாராகயிருந்தார். ஏனெனில் காமம் அவரை அவ்வளவு படுத்தியது. இப்போது அவருக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. இவளுடன் என்னவேண்டுமென்றாலும் பேசலாம், யாரிடமும் சொல்லமாட்டாள் என்று நிச்சியமாக நம்பினார். என் தேகமே உன் அல்குலின் நினைவில்தான் மிதக்கிறது என்று சொல்வோமா என்று நினைத்தவர் பின்பு இப்படிச் சொன்னார். ”என்னைப் புரிந்துகொள்; எப்போதும் உன் நினைவாகவே இருக்கிறேன். காமம் என்னை அப்படிப் படுத்துகிறது. ஒரே ஒரு தடவை  இதற்குச் சம்மதித்துவிடு.” 

கைகளைக் கட்டிக்கொண்டு சிறிதுநேரம் திருவேங்கடத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், ”i am looking like a whore?” (திருத்தம்) என்றாள். அவள் அப்படிக் கேட்பாள் என்று திருவேங்கடம் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஜெர்சி மாதிரி ஒரு அழகான பெண்ணிடமிருந்து தேவடியாள் என்ற வார்த்தையை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சிறிது தடுமாறியவர் பின் கீழ்க்கண்டவாறாகச் சொன்னார். 

”நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. ஆனால், என்னுடைய இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள். காலம் அந்தப் பெண்ணாக உன்னையே எனக்கு உணர்த்துகிறது. இதற்காக என் வீட்டுக்கு வரவேண்டிய சம்பிரதாயமெல்லாம் தேவையில்லை. உனக்கு விருப்பமென்றால் அதோ அந்த மரத்துக்குப் பின்னால் யாருமே பார்க்காமல் பத்து நிமிடம்… அதுவும் வேண்டாம் ஒரு ஏழு நிமிடம்…”  

திருவேங்கடம் இப்போது ஜெர்சியை எந்தத் தயக்கமுமில்லாமல் நேராகப் பார்த்தார். ஜெர்சி அப்போதும் சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். எதற்காகச் சிரிக்கிறாள்? இப்படி அலைகிறானே என்றா? அலைவோம். பெண்களுக்கு அலைவது பிடிக்குமென்று யாரோ சொன்னார்களே? ஆனால் காமத்துக்காக அலைவது பிடிக்குமா? அதைப்பற்றி பிறகு யோசிக்கவேண்டுமென்று நினைத்தார்.  

”இதோ பாருங்கள் மிஸ்டர் திருவேங்கடம்… ஒரு பெண்ணால் ஒரு ஆணைப் பற்றி அவர்களின் பார்வையிலேயே அறிந்துகொள்ள முடியும். நீங்கள் என்னைப் பார்ப்பதிலிருந்தே உங்கள் எண்ணங்களை நான் அறிந்துகொண்டேன். அது குறித்து நான் கோபம் கொள்ளவில்லை. ஏனெனில் முப்பது வயதிலேயே உங்கள் மனைவியை இழந்து விட்டீர்களென்றும் எனக்குத் தெரியும். ஆனால் அதற்காக I can’t share my vagina with you << என்றாள். 

அல்குல் என்றவுடன் திருவேங்கடத்துக்கு அவருடைய சிசுனத்திலிருந்து திரவத்துளியொன்று வெளியேறி அவர் உள்ளாடையை நனைப்பது போல் பட்டது. 

திருவேங்கடம் அப்போதிருந்த மனநிலையில் ஜெர்சி ஒரு எலும்புத் துண்டை அப்பால் தூக்கிப்போட்டு அதை ஒரு நாயைப்போல் கவ்வி எடுத்து வா, மற்றதைப் பிறகு யோசிக்கலாம் என்று சொன்னாலும் அதைச் செய்வதற்கு தயாராகவேயிருந்தார். கூடவே ஜெர்சியின் அலட்டிக்கொள்ளாத பேச்சு அவருக்கு இன்னும் தைரியத்தைக் கொடுத்தது. எப்படியும் இன்று மாலைக்குள் சம்மதித்துவிடுவாளென்றே அவர் நம்பினார். அல்லது சம்மதிக்க வைத்து விடலாம்.  

”எனக்குப் புணர்ச்சியில் கஷ்டமில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற புளித்துப்போன சாம்பாரும் ஒத்துவராது. பச்சையாகச் சொல்லிவிடுகிறேன். I am not a virgin. ஆனால் பாருங்கள், நான் யாருடன் படுக்க வேண்டுமென்பதை நான்தான் தீர்மானிக்கவேண்டும். ஏனெனில் இது என்னுடைய தேகம்,” என்றவாறாக ஜெர்சி திருவேங்கடத்தைவிட்டு அப்பால் நகர்ந்தாள். இப்போது திருவேங்கடத்துக்குப் பயங்கரமாக சுழன்றுகொண்டிருந்த இயந்திரமொன்று தன் சுழற்சியைத் திடீரென்று நிறுத்தியது போலிருந்தது. ஒருக்கணம் தன்னையே மறந்து திக்கென்று நின்றவர் மறுபடியும் ஜெர்சியைப் பார்த்தார். பின்னாலே சென்று மறுபடியும் ஒருமுறை கேட்கலாமா என்று பட்டது.  

அவள் இவரைப் பார்த்துச் சிரித்து, தன் ஆட்காட்டி விரலல் வா என்று அழைத்தாள். அவள் அப்படி அழைத்ததே திருவேங்கடத்துக்குக் கிறக்கமாக இருந்தது. நாடி நரம்பெல்லாம் சூடேறுவது போல் தோன்றியது.   

இவள் விளையாடுகிறாள். என்னை, என் தேகத்தைச் சூடேற்றிவிட்டு விளையாடுகிறாள். என் நிலைமையைத் தெரிந்துகொண்டு விளையாடுகிறாள். திருவேங்கடத்தை ஒரு இனம் புரியாத பதற்றம் தொற்றிக்கொண்டது.  

இரண்டாம் சம்பவம்: போகும்போது ஜெர்சியின் கும்பலைக் கண்டார். திருவேங்கடத்தைக் பார்த்ததும் அந்தக் கும்பல் பெரிதாகச் சிரித்து look mr thiruvenkadam is coming என்றது. அவர்களில் ஒருவன் “What happened?” என்றான். அப்போது ஜெர்சி mr thiruvenkadam want eat my pussy என்றதும் கும்பல் மறுபடியும் ஒருமுறை – ஆனால் இம்முறை பலமாகச் சிரித்துக்கொண்டது. திருவேங்கடத்துக்கு என்னவோபோல் ஆயிற்று. கூடிய வரை கும்பலை விலக்கிக்கொண்டு செல்ல அவர் முயன்றார். அப்போது அவரை இடைமறித்து  If you want thiruvenkadam you can taste it. It’s very delicious என்று ஜெர்சியின் தோழியொருத்தி கூறவும் ஜெர்சி அவள் தோளில் குத்தி பின் திருவேங்கடத்தைப் பார்த்துச் சிரித்தாள்.  

ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்தபோது திருவேங்கடத்தின் உடல் வியர்க்கத் தொடங்கியது. அவசரமாகத் தலைவலி மாத்திரையை விழுங்கிக்கொண்ட அவர், பிற்பாடு நிரம்பத் தண்ணீர் குடித்துக்கொண்டார். தன்னுடைய தேகம் இன்னமும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து யாராவது ஏதாவது கேட்டுவிடுவார்களோயென்று பயந்தார்.  

3. 

மாலை போல் சற்றுக் குளிர்ந்தது. தேக நடுக்கம் தீர்வதற்காக மெரினாப் பக்கம் போனார். அவர்பாட்டுக்கு உலாவினார். சிலர் மெரினாவில் குளித்துக்கொண்டிருந்தார்கள். தானும் குளிப்போமா என்று நினைத்தவர், பின்னர் பார்க்கலாமென்று அந்த யோசனையைக் கைவிட்டார். திடீரென்று ஆடைகளைக் களைந்துவிட்டு அரை நிர்வாணமாக கடலில் குதித்தார். நீருக்கு மேலாகத் தலையைவிட்டு கைகளைச் சவட்டினார். பின்பு அப்படியே புரண்டு நீரில் மூழ்கி கடலின் ஆழத்திற்குச் சென்று மணலைத் தொட்டு கொஞ்ச நேரத்தில் கடலின் இன்னொரு பகுதியில் எழும்பினார். முகத்தை வழித்துத் துடைத்தவருக்குக் கண்கள் எரிவது போல் பட்டது.  

வீட்டுக்குத் திரும்பியபோதுகூட திருவேங்கடத்தின் தேக நடுக்கம் நின்றபாடில்லை. இரண்டு தலைவலி மாத்திரைகளை விழுங்கியும் நடுக்கம் குறைவதாகயில்லை. என்றைக்குமில்லாது தன் உடல் அதிகப்படியாக  வியர்ப்பது போல் பட்டது. ஆத்திரமும், கவலையும் அவரைச் சூழலாயின.  

4. 

கதவைத் திறந்தபோது ஜெர்சியும், அவள் தோழியும் நின்றுகொண்டிருந்தார்கள். நிரம்பிவழியும் புன்னகையோடு திருவேங்கடத்தைத் தள்ளிவிட்ட அவர்கள் கைப்பைகளோடு ஸோஃபாவில் சென்று அமர்ந்தார்கள். பச்சை நிறத்தில் சாயமடிக்கப்பட்ட விரல்களால் அவர்கள் திருவேங்கடத்தை அழைத்தபோது அவருக்கு நடப்பது கனவா அல்லது நனவா எனப் புரியாமல் போயிற்று. சத்தமில்லாமல் அவர்களுக்கு எதிரே சென்று அமர்ந்துகொண்டார். இருவருமே புடவை அணிந்திருந்தார்கள். உதட்டுக்கு அடர்த்தியான கருமை நிறத்தில் சாயமடித்திருந்தார்கள். இப்போதும் ஜெர்சி தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பது திருவேங்கடத்துக்கு என்னவோபோல் இருந்தது.  

”அப்படியானால் நீ நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.”  

தன்னை அவர்கள் ஒருமையில் அழைத்தது திருவேங்கடத்துக்குப் பிடிக்கவில்லையென்றாலும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில், ஜெர்சிக்காகவும் முக்கியமாக அவளின் தூய்மையான அல்குலுக்காகவும் எந்த நிலைக்குச் செல்லவும் அவர் தயாராகவேயிருந்தார்.  

ஏதும் பேசாமல் மௌனமாக இருந்த அவர், இன்னமும் கைகளைப் பிசைந்து கொண்டு தரையைப் பார்த்தவாறே இருந்தார். 

இரண்டு பெண்களும் எழுந்து கொண்டார்கள். திருவேங்கடத்தை அணைத்துக்கொண்டு அமர்ந்தவர்கள், தங்களின் மினுங்கும் தொடைகளை  திருவேங்கடத்தின் கால்களில் போட்டுக் கொண்டார்கள். திருவேங்கடத்துக்குத் திக்கென்றானது. ஆனாலும் அது அவருக்கு வேண்டும்போல் இருந்தது. 

தேகம் பஞ்சு போல் ஆனதை உணர்ந்த அவர், அப்படியே அந்த இரண்டு பெண்களையும் மாறி மாறிப் புணர்வோமா என்று யோசித்தார். அவர்களின் ஸ்பரிசமும், வாசனையும் திருவேங்கடத்தை ஏதோ புதிதாகப் படுத்தியது. சாகும்வரை “அது” அவருக்குத் தேவைப்பட்டது. அதோடு அவர்களின் தடவலில் அவருடைய சிசுனம் லேசாக விறைத்து ஸ்கலிதமடைந்ததைப் போலவும் அவருக்குப் பட்டது.  

திருவேங்கடத்தின் சட்டைப் பொத்தானைத் திறந்து அவரின் தளர்ந்த மார்பை ஜெர்சி தடவியபோது ஜெர்சியின் தோழி அவரின் தொடைகளைத் தடவிக் கொண்டிருந்தாள்.  “யூ வாண்ட் அவர் டேஸ்ட்டி புஸ்ஸி” என்று காதில் கிசுகிசுத்தாள். திருவேங்கடத்துக்கு உடல் வியர்க்கத் தொடங்கிற்று. ஜெர்சியின் தொடைகளைத் தடவியவர், அப்படியே ஸோஃபாவில் தலையைச் சரித்துக்கொண்டார். கண்களை மூடியவாறே ஜெர்சியின் தோழியின் தொடையையும் சேர்த்துத் தடவ ஆரம்பித்தார்.  

இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். திருவேங்கடத்துக்குக் காமம் தலைவரை ஏறியது. ஒரு பாம்புபோல் அவரின் தேகம் முழுவதையும் காமம் ஆட்கொண்டபோது பாதி திறந்த கண்களால் ஜெர்சியைப் பார்த்து, ”Please put your little clit in my mouth” என்றார்.  

தன் தோழியைப் பார்த்து மறுபடியும் சிரித்துக்கொண்ட ஜெர்சி, திருவேங்கடத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள். ”பொறுங்கள் மிஸ்டர் திருவேங்கடம்… நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் நான் தருகிறேன்; ஆனால் அதற்கு முன்னால் நாங்கள் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும்.” 

அரை மயக்கத்திலிருந்த திருவேங்கடம் ஒரு ஆசிரியனான நான், கேவலம் காமத்துக்காக இப்படியெல்லாம் கீழிறங்கி விட்டேனேயென ஒருக்கணம் யோசித்தார். ஒரே ஒரு கணம்தான். பிற்பாடு அவரால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. காமம் காமம் காமம்… இதோ என் ஆசைக்குரிய இளம் பெண். அதுவும் இரண்டு பெண்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் –  என்ன சொல்வார்கள்? எதுவென்றாலும் சொல்லட்டும் – செய்கிறேன். ஆனால் எனக்கு வேண்டியது ஜெர்சியின் தேகம். அவளது வாசனை நிரம்பிய தேகத்தில் என் உடலானது நெளிந்து நெளிந்து ஊர வேண்டும்.  நெற்றி, உதடு, கழுத்து, மார்பு, தொப்புள், இடை, அல்குல் என அவளின் அத்தனை உறுப்புகளிலும் நான் முத்தமிட வேண்டும். இத்தனை ஆண்டுகளாக என்னுள் ஒரு பூதத்தைப் போல் குடிகொண்டிருக்கும் அந்தக் காமத்தை ஜெர்சியின் மார்புக்கிடையில் புதைத்துவிட வேண்டும்.  

ஜெர்சியைப் பார்த்து என்ன செய்யவேண்டுமென கண்களால் கேட்டார்.  

அவர் அப்படிக் கேட்டதும் ஜெர்சியின் தோழி திருவேங்கடத்தின் சிசுனத்தை வெளியில் எடுத்தாள். கொஞ்சமாக விறைத்திருந்த அவரின் சிசுனமானது தன்னைத் தானே ஒருதரம் சுற்றிக்கொண்டு பின்னர் அப்படியே ஒரு பக்கமாகச் சரிந்து விழுந்தது. இரண்டு பெண்களும் திருவேங்கடத்தின் சிசுனத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். பின்னர், ஜெர்சியின் தோழி, திருவேங்கடத்தின் சிசுனத்தைக் கைகளில் வாங்கிக் கொண்டாள்.  

திருவேங்கடத்திற்கு மின்சாரம் ஏறியதைப் போலிருந்தது. முழுத் தேகமும் பரவசமடைந்ததைப் போல் உணர்ந்த அவர், முழுமையான போதைக்குள் இறங்கினார். ஏதோவொரு இனம் புரியாத இன்பம் அவரைத் தொற்றிக்கொண்டது. அவர் கைகள் அனிச்சையாக ஜெர்சியின் மார்புகளைப் பிசையத் தொடங்கிற்று. முதலில் அவர் கைகளைத் தட்டிவிட்ட ஜெர்சி, இரண்டாவது தடவையும் திருவேங்கடத்தின் கைகள் தன் மார்புகளைப் பிசைய ஆரம்பித்தபோது ஒருக்கணம் தன் தோழியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு பின்னர் ஏதும் சொல்லாமல் அதற்கு அனுமதித்தாள்.  

திருவேங்கடத்தின் சிசுனத்தை முன்னும் பின்னுமாகத் தடவிக்கொடுத்த ஜெர்சியின் தோழி, அவர் காதில் “சிக்கி, சிக்கி, சிக்கி” என்று  கிசுகிசுத்தாள். திருவேங்கடம் தன்னுடைய உடல் உஷ்ணமடைந்து வெப்பமாக ஏதோ வெளியேறுவது போல் உணர்ந்தார். இன்பம், இன்பம், இன்பம்… இத்தனை ஆண்டுகளாக இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தேன். எத்தனை ஏக்கம், எத்தனை தேடல், எத்தனை அலைச்சல்… இதோ எல்லாவற்றையும் இந்த இரண்டு பெண்களும் தீர்த்துவிடப் போகிறார்கள். விடைத்த மாம்பழம் போலிருக்கும் தங்களின் அல்குலை மாறி மாறி என் வாயில் திணிக்கப் போகிறார்கள். நான் அவர்களின் வாசனை நிரம்பிய யோனியை ஆழமாக நுகரப் போகிறேன். அவர்களின் லாபியாவைப் பற்களால் கடித்து விளையாடப் போகிறேன்.  அதன் பிறகு என்ன செய்யலாம்? புணரலாம்… அவர்களின் ஈரலிப்பு நிறைந்த பிசுபிசுப்பான புழையில் என் ஆண்குறியைச் சொருகிச் சொருகி… அதன் பிறகு…?  

அதன் பிறகு அப்படியே இறந்து விடலாம். ஆமாம்.. இறந்து விடலாம்! 

கண்களை மூடிச் சரிந்து கிடந்தவரின் தலையில், தோழி சடாரென்று அறைந்தாள். காமத்தில் அவருக்கு எதுவுமே விளங்கவில்லை. கோபம் கொள்வதற்குப் பதில் தோழியைப் பார்த்து கிறக்கமாகச் சிரித்தார். அவள் மறுபடியும் திருவேங்கடத்தின் பிடரியைப் பொத்தி அடித்தாள். ஜெர்சி அப்போதும் சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். திருவேங்கடம் அவளை விடவும் அதிகமாகச் சிரித்தார். இப்போது ஜெர்சியும் திருவேங்கடத்தை அடிக்க ஆரம்பித்தாள். முதலில் செல்லமாகத் தட்டியவர்கள், நேரம் போகப் போக பலமாக அடித்தார்கள். திருவேங்கடம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார். அல்லது அப்போதிருந்த மனநிலையில் அவருக்கு எதுவுமே விளங்கவில்லை. அவர்கள் அடிக்க அடிக்க அவர் அவர்களின் தொடைகளைத் தடவி அல்குலுக்குள் கை நுழைக்கவே முயன்றார்.  

இப்போது திருவேங்கடம் இரண்டு பெண்களின் கால்களுக்குக் கீழே கிடந்தார். ஒரு நாயைப் போல் அவர் தன்னுடைய கால்களையும், கைகளையும் மடித்துத் தரையில் கிடக்க, அவர் நாக்கு வாயிலிருந்து வெளியில் தொங்கிக்கொண்டிருந்தது. திறக்கப்பட்ட அவர் கால்சராய் “ஜிப்”பின் வழியே அவரின் விடைத்த சிசுனம் இளம் சிவப்பு மொட்டுடன் ஒரு குட்டிப் பாம்பு போல் தெரியலாயிற்று. 

”எழும்பு… எழுந்து ஒரு நாயைப் போல் இந்த அறையைச் சுற்றி வா.” தோழி கட்டளையிட்டாள். 

திருவேங்கடம் எழுந்து கொண்டார். தன் நிலையை எண்ணி அவருக்கே சிரிப்பு வந்தது. அழுக்குப்படியாத ஆடையுடனும், நேர்த்தியான சிகையுடனும் தான் பாடம் படித்துக்கொடுக்கும் உருவம் அவர் கண் முன்னே மின்னல் வெட்டியதைப் போல் வெட்டிச் சென்றது . தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் உதறிவிட்டு இரண்டு பெண்களையும் தலையில் பிடித்து வெளியே தள்ளலாம்தான். ஆனால் மனம் ஒப்பவில்லை. காமம் அவரை ஒரு சைத்தானைப்போல் அடக்கி வைத்திருந்தது.  

இப்போது திருவேங்கடம் இரண்டாவது தடவையாக அறையைச் சுற்ற ஆரம்பித்தார். திருவேங்கடம் ஜெர்சியைப் பார்க்கும்போதெல்லாம் ஜெர்சி இவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். உதட்டில் சிரிப்பு. திருவேங்கடத்துக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. தொங்கிக்கொண்டிருக்கும் சிசுனத்தைப் பிடித்து முன்னும் பின்னுமாகத் தடவி கொடுத்தார். முழங்கால்களினால் நடந்து ஜெர்சியை நெருங்கினார். தளர்ந்திருந்த தன் இரண்டு கைகளாலும் ஜெர்சியின் இடுப்பைப் பிடித்துக்கொண்டவர் நேராக அவள் அல்குலில் முகம் புதைத்தார். ஜெர்சி அவர் முகத்தை அப்பால் பிடித்துத் தள்ளினாள். ஆனால் திருவேங்கடம் விடுவதாக இல்லை. ஜெர்சியைத் தன் பக்கமாக இறுக்கியவர் ஒற்றைக் கையினால் அவள் புடவையை தொடை வரை தூக்கினார். ஒரு நாயைப்போல் அவள் தொடைகளில் தன் முகத்தைப் பதித்து வெறிகொண்டவர்போல் முத்தமிட ஆரம்பித்தார்.  

அப்போது தோழி, அவர் பிடரியில் பொத்தி அடித்து அவரைப் பின்னாலிருந்து இழுத்தாள். நிதானமிழந்து தரையில் விழுந்தவரைத் தன் இரண்டு கைகளாலும் பலமாகப் பிடித்துக்கொண்டு பிற்பாடு வெடிச் சிரிப்பு சிரித்தாள். அப்போது ஜெர்சி திருவேங்கடத்தின் மார்பின் மேல் அமர்ந்துகொண்டாள்.  ”thiruvenkadam is pity” என்றாள்.  

you want lick jersy’s pussy mr thiruvenkadam  என்று தோழி கேட்கவும் ஆமாம்டி வேசைகளே; எனக்கு ஜெர்சியின் கூதிதான் வேண்டுமென்று பலமாகக் கத்தினார். அவ்வாறு அவர் பெரும் குரலெடுத்துக் கத்தியது திருவேங்கடத்தின் அறைச் சுவர்களில் பட்டுத் தெறித்தது.  

இரண்டு பெண்களும் பைத்தியம் பிடித்தது போல் சிரித்தார்கள்.  ஜெர்சி தன் புடவையை இடுப்புவரை தூக்கிக்கொண்டு திருவேங்கடத்தின் முகத்துக்கு நேராகத் தன் அல்குலைத் தூக்கிக் காட்டினாள். திருவேங்கடம் அவள் யோனியைக் கவ்வ வரும் போதெல்லாம் சடாரென்று தன் இடுப்பைத் தூக்கிக்கொண்டு  dont stop thiruvenkadam dont stop ; absorption my little pink clit till my death ; it’s feeling amazing  என்று போலியாக நடித்தாள். அவள் அதை ஒரு விளையாட்டாகத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தாள்.  

திருவேங்கடம் களைத்துப் போனார். ஆனால் அவர் காமம் களைத்துப் போவதாக இல்லை. கண்கள் சொருகித் தரையில் படுத்துக் கிடந்தார். இப்போது திருவேங்கடத்துக்கு ஜெர்சியின் மீது சற்றுக் கோபமும் வந்தது. இப்படி ஈவு இரக்கமற்றவளாக இருக்கிறாளே; ஒரே ஒரு தடவை அவள் குறியினை என் வாயில் திணித்தால் என்ன குறைந்து விடப் போகிறது?  

திருவேங்கடம் தன்னை மறுபடியும் ஆசிரியனாக நினைத்துக் கொண்டார். சோப்பினின் கவிதையை மாணவனை வாசிக்கச் சொல்லி அதன் பொருளை இருநூறு சொற்களுக்குக் குறையாமல் கூறச் சொன்னார். மாணவன் அதை ஐம்பது சொற்களில் கூறி முடித்தபோது மாணவனைப் பொதுவெளியில் அவமானப்படுத்த விரும்பாமல் தானே சொற்களை எடுத்துக்கொடுத்து கவிதையின் பொருளை இருநூறு சொற்களில் பூர்த்தியாக்கினார்.  

திடீரென்று தன்னினைவு வந்து ஜெர்சி ஜெர்சி என்றார். திருவேங்கடத்தின் மார்பிலிருந்து எழுந்துகொண்டவளான ஜெர்சி, தன்னுடைய நீண்ட குதியினைக் கொண்ட “சாண்டில்ஸ்” காலினால் திருவேங்கடத்தை உதைத்தாள். எச்சிலைக் காறி உமிழ்ந்தாள். திருவேங்கடம் அது எதையுமே சட்டை செய்தாரில்லை. கூதி, கூதியென்று முனகினார். பெண்களிருவரும் பெரும் கூச்சலிட்டு திருவேங்கடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். உதடுகளைக் குவித்து அதன் வழியே நாக்கை நீட்டி “உவ்வே” என்றார்கள். கைப்பைகளைத் தூக்கிக் கொண்டவர்கள் சிரித்துக்கொண்டே வெளியேறினார்கள். அப்படி வெளியேறும்போது மறுபடியும் திருவேங்கடத்தை பார்த்துக்கொண்ட அவர்கள் உடலைக் குறுக்கி “களுக்”கென்று சிரித்துக்கொண்டார்கள்.  

திருவேங்கடம் “ஜிப்”பின் வழியே நீண்டிருந்த சிசுனத்தோடு கழிப்பறையை நோக்கி நடக்கலானார். 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top