கெட்ட வார்த்தை.

ஒரு மனிதனை கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுதல் அதாவது, பெண்குறியைச் சுட்டி ஆபாசமாக வசைதல் மனிதப் பண்புகளில் மிகப் பழமையானது என்றே எனக்குத் தோன்றுகிறது. 

ஒரு உதாரணம் சொல்கிறேன்; அப்போது எனக்குப் பதினைந்துவயது. ஒருதடவை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஒரு இடத்தில், ஒரு கூண்டுக்குள் நிறையக் குரங்குகள் இருந்தன. அதில், இரண்டு குரங்குகள் –ஒன்று ஆணாகவும், மற்றது பெண்ணாகவும் –கட்டிப் பிடித்துக் கொஞ்சிக் குலாவி காதல் செய்துகொண்டிருந்தன. மனிதர்களாகிய நாங்கள் அந்த இரண்டு குரங்குகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். இதனால், கோபம் கொண்ட பெண் குரங்கு, எங்களை பார்த்து முறைத்தது.  

நாங்கள், மறுபடியும் மறுபடியும் குறிப்பிட்ட இரண்டு குரங்குகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். இம்முறை, பெண் குரங்குக்கு கோபம் தலைக்கேறி இருக்க வேண்டும். நேராகஎங்கள் முன் வந்து நின்ற குரங்கு, இடுப்பை சற்றே மேலே தூக்கிக்கொண்டு ஒற்றைக் கையால் தன் பெண்குறியை விரித்துக் காட்டியது.  

புரிகிறதா? குரங்குகளுக்குப் பேசத் தெரிந்திருந்தால் அன்று அந்தப் பெண் குரங்கு எங்களை பார்த்துப் பெண்குறியைச் சுட்டி வெளிப்படையாகவே ஆபாசமாகத் திட்டியிருக்கும். குரங்குகளுக்குப் பேசத் தெரியாது; ஆகவே, ஆபாசச் செய்கை. மனிதர்களாகிய எங்களுக்குப் பேசத் தெரிந்திருப்பதால் ஆபாசச் செய்கைக்குப் பதில் ஆபாச வசைவு.  

இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், கோபமேற்படும்போது ஆண்குறிக்குப் பதிலாக பெரும்பாலும் பெண்குறியையே பயன்படுத்துவது ஆதிகாலம் தொட்டே அதாவது, மனிதர்கள் தோன்றுவதற்கு எது ஆதாரமான விஷயமோ அந்த ஆதாரம் முதலே இருந்து வந்திருக்கிறது என்பதுதான். மனிதன் நாகரீகம் அடைந்ததற்குப் பிற்பாடுதான் பொதுக்குறியை (சூத்தோட்டை –ஆங்கிலத்தில் ஆஷ் ஹோல்) வசைச் சொல்லாகப் பாவிக்கும்பழக்கம் தோன்றியிருக்கிறது.  

அதாவது, ஆபாச வசைவின்போது பெரும்பாலும் பெண்ணின் உறுப்புகளே அவ்வசைவின் போது எடுத்தாளப்படுகிறது. இதைச் சிலர் பிற்போக்குத்தனமான பார்வையெனக் கருதினாலும் என்னால் அப்படிக் கருத முடியவில்லை. எப்படிக்  கோபமேற்படும்போது தூஷண வார்த்தைகளை நாம் தன்னிச்சையாக வெளிப்படுத்துகிறோமோ அதைப் போன்ற ஒரு தன்னிச்சையான செயலே பெண் உறுப்புகளை தூஷண வார்த்தையாகப் பிரயோகித்தல். நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.  

ஒரு பெண். பிறப்பால் பிராமணர். அவர் வசிக்கும் தெருவில் தூஷண வார்த்தைகளை சம்பாஷிக்கவே மாட்டார்கள். அவ்வளவு ஆச்சாரமான தெரு அது. ஒருதடவை, இந்தப் பெண்ணுக்கும் காய்கறி விற்பவனுக்கும் ஏதோ தகராறு.  காய்கறிக்காரன் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லித் திட்டியிருக்கிறான். இத்தனைக்கும் காய்கறிக்காரன் மீதுதான் முழுத் தவறும். ஒருகட்டத்தில், இவன் அவளை பார்த்து ‘தேவிடியா’ என்றும் திட்டி விடுகிறான். பிராமணத்திக்கு வந்ததே கோபம். சுற்றியிருந்தவர்களைப் பற்றி அவள் அக்கறையே கொள்ளவில்லை. காய்கறிக்காரனை சரமாரியாகத் திட்ட ஆரம்பித்து விட்டாள். இறுதியில், தூஷண வார்த்தைகளையே கேட்டிராத அல்லது, அப்படிச் சொன்னால் அது தீட்டு, அபச்சாரம் என்று கருதும் ஒரு சாதி அமைப்பை பின்புலமாகக் கொண்ட அந்தப் பெண் காய்கறிக்காரனைப் பார்த்து “புண்டாமவனே…!” என்று திட்டியும் விடுகிறாள். ஆனால், பிற்பாடு அப்படிச் சொன்னதற்காக நாக்கை கடித்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறியும் விடுகிறாள்.  

யோசித்துப் பாருங்கள்! சேரி போன்ற – எல்லோரும் அப்படியில்லையென்றாலும் பெரும்பாலும் – பகுதியில் வசிக்கும் பெண்கள் ஆபாசச் சொற்களை மிகச் சரளமாகப் பயன்படுத்துவார்கள். அது அங்கு சாதாரணம். ஆனால், யோனி, லிங்கம் போன்ற உறுப்புகளை தொடுவதே அசிங்கமென்றும், கூதி, சுன்னி என்று நினைப்பதுகூட  அபச்சாரமென்றும் கருதும் ஒரு பெண்ணால் எப்படி அப்படி ஆபாசமாகக் கூற முடிந்தது? அதுவும் பல பேர் முன்னிலையில்.  

அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னோர் விஷயம், குறிப்பிட்ட பிராமணப் பெண் வேண்டுமென்றோ அல்லது எதிராளியை அவமானப்படுத்தும் நோக்கத்திலோ அத் தூஷண வார்த்தையை உதிர்க்கவில்லை; மாறாக, ஒரு கடுமையான கோபத்தின் வெளிப்பாடாக தன்னையும் அறியாமலேயே அவ் வார்த்தையை அவர் உதிர்கிறார்.  

இன்னோர் உதாரணம், 

இந்தியன் திரைப்படத்தில், ஒரு காட்சியில், மகன் சந்ரு, தன்னைக் கொலை செய்ய முற்படும் தந்தையைப் பார்த்து கோபத்தில் கிழட்டுக் கூதி என்பான். இங்கு கூதி என்கிற சொல்லை மிகக் கடுமையான கோபத்தின் வெளிப்பாடாகவே நாம் காண்கிறோம். இது போகிற போக்கில் எழுதப்பட்ட வசனமோ, அல்லது கவர்ச்சிக்காகப் பாவிக்கப்பட்ட சொல்லோ கிடையாது. அது ஒரு அதீதமான கோபத்தின் வெளிப்பாடு. மனித உளச்சிக்கல் அடிப்படையில் பாவிக்கப்பட்ட வசைவு. இத்தனைக்கும் சந்ரு கல்வி அறிவில்லாதவர் கிடையாது. நன்றாகப் படித்து அதற்குரிய பதவியில் இருப்பவர். பிறகேன் தன் தந்தையைப் பார்த்தே தூஷண வார்த்தையைப் பிரயோகிக்கிறார்?  

ஏனெனில், தூஷணமென்பது பொதுவான ஒரு விஷயம். அப்பொதுப் பணப்பை கல்வியால் அவ்வளவு இலகுவில் சீரமைத்துக் கொள்ள முடியாது. வேணுமென்றால் மட்டுப்படுத்த மட்டுமே இயலும். 

புரிகிறதா ! 

கடுமையான கோபத்திலிருக்கும்போது தூஷண வார்த்தையை பிரயோகித்தல் அதுவும் முக்கியமாக பெண்குறியைச் சுட்டி வசைதல் பிற்போக்குத்தனமானதோ அல்லது கல்வியறிவற்றவர்களின் செயலோ கிடையாது. அது மனிதப் பண்புகளில் மிகப் பழமையானது. மூளையின் ஒரு செயற்பாடு.  

  •  

இதெல்லாம், சாருவின், ‘ட்ரில்லிங்’ பிரச்சனை பற்றி படித்தபோது நினைவுக்கு வந்தது. தான் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கீழே பயங்கரமாக ‘ட்ரில்லிங்’ போடுவது குறித்தும் இதனால் தன் மனைவி அவந்திகாவுக்கு ‘பிட்ஸ்’ வந்தது குறித்தும் மிகுந்த மனவுளைச்சலோடு தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். ஆச்சர்யமாக இருக்கவில்லை. ஏனெனில், மனித உரிமைகளையும் அவர் சார்ந்த கொள்கைகளையும் சிறிதுகூட மதிக்காத ஒரு நாட்டில் இருபத்திமூன்று வருடங்களாக வாழ்ந்துவிட்டுதான் தற்போது ஜெர்மனியில் குடியேறியிருக்கிறேன். 

இங்கே – ஜெர்மனியில் – ஞாயிற்றுக்கிழமைகளில்கூட தோட்டத்தில் வளர்ந்திருக்கும் புற்களை வெட்டுவதற்கு அனுமதியில்லை. ஏனெனில், விடுமுறை நாட்களில் மனிதர்கள் ஓய்வாக எவ்வித இடையூறுமற்று மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்பதற்காக இந்தச் சட்டம். மீறினால், போலீசுக்கு அறிவுறுத்தி விடுவார்கள். அப்படியெனில், எப்போதுதான் வெட்டுவது? கிழமை நாட்களிலேயே அதைச் செய்துவிட வேண்டியதுதான். கிழமை நாட்களில் எப்படிச் செய்வது? ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எல்லோருக்கும் விடுமுறை. மற்றைய நாட்களில் முழுநேரமும் வேலை. ம்ஹூம்… அந்தக் கதைக்கே இங்கு இடமில்லை. 

‘ட்ரில்லிங்’ பிரச்சனை சம்பந்தமாக சாரு மேலும் குறிப்பிடும்போது காவலாளியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுக் கடைசியில், ஒருமையில் திட்டு வாங்கி வந்ததாக எழுதியிருப்பார். உண்மையில், அதைப் படித்தபோது என் மனம் அதிர்ச்சிக்குள்ளானது. மனிதர்கள் என் இப்படி இருக்கிறார்கள்? ஏன் சக மனிதர்களுக்கு மரியாதையை கொடுக்க அவர்கள் மனம் ஒப்புவதில்லை? 

பாலியல் உறுப்புகளை கூறி வசைவது கல்வியறிவு அற்றவர்கள் பயன்படுத்துவதெனவும் கற்றவர்கள் அதைப் பயன்படுத்துவது தகாது/ அல்லது, அவர்கள் அதைக் கூற மாட்டார்கள் எனவும் கொள்ளப்படுகிறது. ஒரு வகையில் இது சரியானதே. “இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” என்கிறார் வள்ளுவர். ஆக, கற்றவர்கள் கெட்ட வார்த்தை பேசக் கூடாதா? பேசக் கூடாதென்றில்லை. கற்றவர்கள் மாத்திரமல்ல; கல்லாதவர் கூட கெட்ட வார்த்தையை சரளமாகப் பேசலாம். ஆனால், ஒருவனை/ ஒருத்தியை/ ஒன்றைச் சுட்டி வசைதல் முறையற்றதாகாது. ஒரு தோழனைக் கண்டு ‘வாடா சுன்னி’ என்று இன்னொரு தோழன் அழைப்பது கற்றவர்களில் கூட காணும் பண்பு. அது மாத்திரமல்ல; ‘தாயோளி’, ‘ங்கோத்தா’ போன்ற கடும் வசைவுச் சொற்களும் அவர்கள் மத்தியில் மிகச் சரளமாகப் புழங்குகிறது.  

Son of the Bitch என்பதை தமிழில் ‘வேசிக்குப் பிறந்தவன்’ என்பார்கள். அதாவது, ‘பிட்ச்’ என்றால் வேசை. இது தவறு. பிட்ச் என்றால் வேசை அல்ல; பெட்டை நாய். பெட்டை நாயின் குணமென்ன என்பது நாங்கள் அறிந்ததே. அதனாலேயே மேற்கத்தையர்கள் ‘பிட்ச்’ என்ற சொல்லை பாவிக்கிறார்கள். மேற்கத்தையர்களை பொறுத்தவரை சன் ஆஃப் தி பிட்ச் என்ற சொல் வசைச் சொல் கிடையாது. ஆனால் தமிழில் தேவிடியா மகன் என்பது ஒருவரை கொலை செய்யத் தூண்டுமளவுக்கு கெட்ட வார்த்தை. 

பத்து வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் என் உறவுக்காரர் ஒருவரின் உணவுச்சாலையில் காசாளராக வேலை பார்த்து வந்தேன். ஒரு ஆட்டோக்காரர் இரவு வேளையில் எப்போதும் எங்கள் கடைக்குத்தான் உணவருந்த வருவார். அப்படி வரும்போதெல்லாம் சோறுதான் சாப்பிடுவார். புட்டையும், இடியப்பத்தையும் அவர் தொடுவதே இல்லை. பெரும்பாலும் இரவு நேரங்களில் எங்கள் கடையில் சோறு இருக்குமென்றாலும் சிலநேரங்களில் தீர்ந்து விடுவதுமுண்டு. அவ்வாறான நேரங்களில், அவரிடம், சோறு தீர்ந்து விட்டது என்று சொல்வதற்கு மனம் ஒப்பாமல் பக்கத்துக் கடையிலிருந்து சோற்றைக் கடனாக வாங்கி கொடுப்போம். இது கடையில் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் தெரியும். 

அன்றும் அப்படித்தான். ‘குறிப்பிட்ட’ ஆட்டோக்காரர் சாப்பிடுவதற்காக எங்கள் கடைக்கு வந்திருக்கிறார். கடையில் சோறு தீர்ந்து போய் விட்டது. அப்போது கடையில் வேலை பார்க்கும் ஒருவர் – பெயர் தருமலிங்கம் – இவரிடம் சோறு தீர்ந்து விட்டதென்று முகத்தில் அடிக்குமாற் போல் சொல்லி இருக்கிறார். ஏன் இவர் வந்தால் பக்கத்துக்கு கடையில் சோறு எடுத்துக் கொடுக்கும் விஷயம் உங்களுக்குத் தெரியாதா எனக் கேட்கப் போன என்னையும் பச்சை தூஷண வார்த்தைகளால் நிந்தித்தார் அவர். எனக்குப் பெரும் லஜ்ஜையாகப் போய்விட்டது. இன்றுவரை அந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை.  

மேற்குறிப்பிட்ட சம்பவத்தை ‘பொதுவானவொரு’ பண்பு என்பதற்குள் என்னால் வகைப்படுத்த முடியவில்லை. அத்தோடு இப்பண்பு கோபத்தின் வெளிப்பாடும் அல்ல; மாறாக, குறிப்பட்ட நபர் தன்னோடு தர்க்கத்தில் ஈடுபடுபவரை தாக்குவதற்கான இறுதி ஆயுதமாக எடுத்துக் கொள்ளும் யுக்தி அது. அத்தோடு மிகத் தவறான ஒரு செயலும் கூட.  

ஜெர்மனியை நாஜிக்களின் தேசமென இன்றுவரை சிலர் வருணிப்பதைக் கண்டிருக்கிறேன். நாஜிக்கள் தொண்ணூறு லட்சம் யூதர்களை கொன்று குவித்தவர்கள் என்பது உண்மைதான். ஆனால், அவ்வாறான துவேசத்தை இப்போது இங்கு எங்குமே காண முடியாது. அப்படியே இருந்தாலும் ‘அவர்கள்’ ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவானவர்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜெர்மன் மொழியில் Du என்றால் நீ. Sie என்றால் நீங்கள். உயர்ந்த பதவியில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் எவரையும் எவரும் ஸி என்று விளிப்பதில்லை. டூ தான். அப்படி டூ போட்டுப் பேசுவதை யாரும் மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்வதுமில்லை. மாறாக, அவர்கள் அதை நட்புரீதியாக என்றவாறாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் கூட தொழிற்சாலையில் என்னோடு பணி புரியும் அத்தனை பேரையும் Sie சொல்லியே அழைப்பேன். பதிலுக்கு அவர்கள் எனக்கொன்றும் அத்தனை வயதில்லை; நீ என்னை Du போட்டே அழைக்கலாமென்று சிரித்துக் கொண்டு சொல்வார்கள். 

விஷயம் இப்படியிருக்க நம் அண்டை வீட்டுக்காரர்களை யாரும் Sie போட்டு அழைப்பதே கிடையாது. டூ தான். இது விஷயமல்ல; இப்போது நான் சொல்லப் போவதுதான் விஷயம். நான் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரில் ஒருவர் இருக்கிறார். கலப்பில்லாத பக்கா ஜெர்மானியர். நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம் உளமார்ந்த – கவனிக்கவும்: உளமார்ந்த – புன்னகையோடு வணக்கம் சொல்லி வைப்பார். தெருக்களில் காணும்போது Sie போட்டு நலமாக உள்ளீர்களா என விசாரிப்பார். அத்தனை நற் பண்புகளை உடையவர். இத்தனைக்கும் அவர் யாரென்று நினைக்கிறீர்கள்? அவரொரு கஞ்சா புகைக்கும் பழக்கம் கொண்டவர். ஆம்… அவர் எப்போதெல்லாம் தன் வீட்டுக் கதவைத் திறக்கிறாரோ அப்போதெல்லாம் என் முகத்தில் குப்பென்று கஞ்சா நெடி அடிக்கும். 

இப்படியான பண்புகளைக் கொண்ட மனிதர்களை நம் இந்தியாவிலோ இலங்கையிலோ காண முடியுமா? படித்தவர்கள், மேல்தட்டு வர்க்கமென எண்ணப்படுபவர்கள்கூட அயோக்கியவாதிகளாக இருக்கிறார்களே…! 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன